32 கி.மீ மைலேஜ், ரூ6.49 லட்சம் தான் விலைன்னா யாருதான் இந்த காரை வாங்க மாட்டாங்க?

இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களுக்கு என்றுமே டிமாண்ட் உள்ளது. முக்கியமாக முதல் தலைமுறையாக கார் வாங்கும் பலர் இந்த செக்மெண்ட் காரை தான் விரும்பி வருகின்றனர். இந்த செக்மெண்டில் கடந்த மாத விற்பனையை பார்க்கும் போது மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை மாருதி மற்றும் மற்ற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அதில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 13,275 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 16,422 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஜூன் மாதம் விற்பனை 19 சதவீதம் குறைவுதான்.

Maruti Swift

இருந்தாலும் ஹேட்ச் பேக் செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் காராக மாருதியின் ஸ்விஃப்ட் கார் தான் விற்பனையாகி வருகிறது. இந்தகார் போட்டி நிறுவனங்களின் கார்கள விட அதிகமாக விற்பனையாகியுள்ளது. இதற்கு போட்டியாக விற்பனையாகும் வேகன்ஆர் கார் 12,390 கார்களும், பலேனோ கார் 8966 கார்களும் விற்பனவையாகியுள்ளன. மற்ற கார்கள் எல்லாம் ஸ்விஃப்ட் காரை விட குறைவாக விற்பனையாகியுள்ளது.

ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் இசட் சிரீஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும், அதே நேரம் 101.8 எனஎம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் 25.75 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது.

Maruti Swift

சிஎன்ஜியில் இந்த கார் 32.85 கி.மீ மைலேஜை வழங்குகிறது. அதிக மைலேஜ் தருவது தான் இந்த காரின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல இந்த கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 14 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ6.49 லட்சம் முதல் ரூ9.64 லட்சம் என்ற விலையில்விற்பனையாகி வருகிறது.

ஸ்விஃப்ட் கார் கடந்தாண்டை விட இந்தாண்டு விற்பனை குறைவாக இருந்தாலும் இந்த செக்மெண்ட் முழுவதும் விற்பனை குறைவாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த செக்மெண்டில் டாடா டியாகோ கார் 17 சதவீ விற்பனை வளர்ச்சியையும், டாடா அல்ட்ராஸ் கார் 1 சதவீத விற்பனை வளர்ச்சியையும் பெற்றுள்ளது. மற்ற அனைத்து கார்களும் விற்பனையில் விழ்ச்சியை சந்தித்துள்ளன.

Maruti Swift

தற்போது மார்கெட்டி்ல மக்கள் எஸ்யூவி கார்களை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் அந்த ரக கார்களின் விற்பனை அதிகரிப்பதால் ஹேண்ட்ச் பேக் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூட மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டிற்கு மாறிவிடுகின்றனர். இதனால் இந்த செக்மெண்ட் முழுவதும் விற்பனை குறைந்து வருவதை காண முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹேண்ட்ச் பேக் கார்களில் ஸ்விஃப்ட் கார் நீண்ட ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கையை பெற்ற சிறந்த காராக இருக்கும் நிலையில் இந்த கார் அதிகம் விற்பனையான ஹேட்ச் பேக் காராக கடந்த ஜூன் மாதம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 13:35 [IST]
English summary
Maruti swift tops hatchback sales june 2025
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X