40 கி.மீ மைலேஜ் தரும் கார் ரெடியாகுது! மாருதியின் மாஸ்டர் பிளான் இதான்!
மாருதி நிறுவனம் சுற்றுசூழலை பாதுகாக்கும் அதே நேரம் குறைந்த விலையிலும் கிடைக்கும் வகையில் புதிய ஹைபிரிட் மற்றும் பூஜ்ஜியம் எமிஷன் மாடல் கார்களில் கவனம் செலுத்த தயாராகி வருகிறது. இதற்கு ஏற்ற தயாரிப்புகள் விரைவில் வெளியாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவமன் சிறிய கார்களுக்க பெற்ற பெற்றது. தற்போது சிறிய ரக கார்கள் விற்பனை குறைவாக நடந்து வரும் நிலையில் இதில் அடுத்த கட்டத்தை திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது உள்ள கார்களில் ஃபேஸ்லிஃப்ட்களை கொண்டுவருவது கார்களில் கலர் மற்றும் டிசைன் மாற்றம் மாற்றி விற்பனைக்கு கொண்டு வருவது வேலைக்கு ஆகாது என்பது தற்போது அந்நிறுவனத்திற்கு புரிந்து விட்டது.

இந்நிறுவனம் தற்போது ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களில் சிறிய ரக கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களை அந்நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டது. கவரிங் கிராஸ் ஓவர், ஹேட்ச்பேக், எம்பிவி செக்மெண்ட்களில் இந்தகார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இதில் முக்கியமான மாடல் அப்டேட் செய்யப்படும் ஃபிராங்க்ஸ் கார் தான். குளோபல் மாடலில் விற்பனையாகும் ஃபிராங்க்ஸ் காரில் கிராஸ்ஓவரில் சில அப்டேட்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இது போக இந்த காரில் அடாஸ் தொழிற்நு்டபம் இடம் பெறும். சர்வதேச அளவில் இந்த காரில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இருக்கிறது.விரைவில் இதை இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டம் மாருதியிடம் உள்ளது.இதற்காக அந்நிறுவனமே ஹைபிரிட் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது.

இதற்கிடையில் இந்நிறுவனம் புதிய என்டரி லெவல் கார் ஒன்றை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. முதன் முறையாக கார் வாங்குபவர்களுக்கு ஏற்றவகையில் இந்த காரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரில் ஃப்யூயல் ஃபிளக்ஸிபிளிட்டி மூலம் ரன்னிங் செல்வு குறைவாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளுது. இந்த காரில் சிஎன்ஜி, ஃபிளக்ஸ் ஃப்யூயல், ஹைபிரிட் உள்ளிட்ட ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்ததாக புதிய காம்பேக்ட் எம்பிவி கார் ஒன்றை அந்நிறவனம் உருவாக்கி வருகிறது. இது எர்டிகாவை விட குறைவான விலையில் விற்பனைக்க கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது சுஸூகி நிறுவனத்தின் ஸ்பேஸியா என்ற பெயரில் ஜப்பானில் விற்பனையாகி வரும் எம்பிவி கார் போன்ற லுக்கில் இடம் பெறும். அதிலிருந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இது போக இந்நிறுவனம் பஞ்ச்,எக்ஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் புதிய காரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதில் எஸ்யூவி காரின் டிசைன் இருக்கும். இதில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் தயாராக வாய்ப்புள்ளது.
இது போக மாருதி நிறுவனம் தனது பலேனோ காரில் 2027 ம் ஆண்டு புதிய தலைமுறை எடிசனை வெளியிட திட்டமிட்டு வருகிறது.இந்நிறுவனம் இடந்த காரில் புதிய டிசைன் மற்றும் பிரிமியம் அம்சங்களை பொருத்த திட்டமிட்டு வருகிறது. இதில் ஸ்டிராங்க் ஹைபிரிட் ஆப்ஷன் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் தற்போது இசட் சிரீஸ் 1.2 லி நேச்சுரலி அஸ்பயர்டு 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹைபிரிட் பொருத்தப்பட்டால் லிட்டருக்கு 40 கி.மீ மைலேஜ் கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் சிறிய ரக கார்கள் அதிக மைலேஜ் தரும் கார்கள் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரண்டு அம்சங்களும் உள்ள கார்களுக்கு தான் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனால் நீங்கள் எதிர்காலத்தில் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் இந்த கார்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








