வேற எந்த கார்லயும் பார்க்க முடியாது! மாருதி 7 அம்சங்களை இந்த காரில் தான் அறிமுகமாகியிருக்குது!

மாருதி நிறுவனம் விக்டோரியஸ் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் மற்ற மாருதி கார்களில் இல்லாத 7 புதிய அம்சங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பெரிய டச் ஸ்கிரீன், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10.1 இன்ச் டச் ஸ்கீரீன்

மாருதி இன்விக்டோ காரில் தான் முதன்முதலில் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. அதே சிஸ்டம் தான் விக்டோரியர் காரிலும் வருகிறது. ஆனால் இதில் யூஐ மாற்றப்பட்டுள்ளது. இதில் அலெக்ஸா ஆட்டோ வாய்ஸ் ஏஐ, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Maruti Victoris 7 Unique Features

காருக்கு அடியில் சிஎன்ஜி

மாருதி விக்டோரியஸ் காரில் அடிப்பகுதியில் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் பூட் பகுதியை முழுமையாக பயன்படுத்த முடியும். பொதுவாக சிஎன்ஜி கார்களில் பூட் வசதி பிரச்சனை இருக்கும். இதில் அதை நீக்கி புதிய முயற்சியை மாருதி கையில் எடுத்துள்ளது. இது சிஎன்ஜி பிரியர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

பவர்டு டெயில் கேட்

மாருதியின் இன்விக்டோ காரிலேயே பவர்டு டெயில் கேட் வழங்கப்ட்டுள்ளது. ஆனால் விக்டோரியஸ் காரில் தான் இதில் கெஸ்டர் கண்ட்ரோலும் வழங்கப்பட்டுள்ளது. இதைனால் நீங்கள் கை நிறைய லக்கேஜ்களை எடுத்து வந்தாலும் உங்ள் கால்களை வைத்து சிக்னல் காட்டியே டெயில் கேட்டை தானாக திறக்க வைக்க முடியும். இது இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

Maruti Victoris 7 Unique Features

லெவல் 2 அடாஸ்

மாருதி நிறுவனம் தனது விக்டோரியஸ் காரில் தான் முதன் முறையாக லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஹைபீம் அசிஸ்ட், முன்பக்க மோதுதல் வார்னிங், பின்பக்க கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆகிய அம்சங்கள் உள்ளது. இது டாப் வேரியன்டான இசட்எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்டில் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனில் வரும் காரில் மட்டுமே கிடைக்கும்.

10.25 இன்ச் முழு டிஜிட்டல் டிஸ்பிளே!

மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ கார்களில் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை வைத்திருந்தாலும் இந்த விக்டோரியஸ் காரில் தான் 10.25 இன்ச் என்ற பெரிய அளவிலான டிஸ்பிளேவை வழங்குகிறது. இதில் ரேஞ்ச், மைலேஜ், ஸ்பீடு, கியர், உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறுகிறது. இது இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் மற்றம் விஎக்ஸ்ஐ ஸ்டிராங்க் ஹைபிரிட் ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

Maruti Victoris 7 Unique Features

64 கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங்

மாருதி நிறுவனம் முதன் முறையாக இந்த காரில் தான் 64 நிற ஆம்பியன்ஸ் லைட்டிங்கை இந்தகாரில் வழங்கியுள்ளது. இது பிரிமியம் மற்றும் கொகுசு கார்களில் மட்டுமே அதிகம் காணப்படும் அம்சமாக இருக்கிறது. இது மார்கெட்டில் பல கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாருதி நிறுவனம் விக்டோரியஸ் காரில் முதல் முறையாக இந்த அம்சத்தை சேர்த்து இந்த போட்டியில் இணைந்துள்ளது. இது இசட்எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்டில் மட்டுமே கிடைக்கும்.

இன்ஃபினிட்டி சவுண்ட்

மாருதி நிறுவனம் தனது விக்டோரியஸ் காரில் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இது மாருதி கார்களில் பொருத்தப்படுவது இது தான் முதன் முறை. இந்த சிஸ்டத்தை சென்டர் ஸ்பீக்கர் சப் வூஃபர், டால்பி அட்மாஸ் சரவுண்ட் சிஸ்டம், இன் பில்டு 8 சேனல் ஆம்பிளிஃபையர், ஆகியன உள்ளன. இந்த காரில் இசட்எக்ஸ்ஐ பிளஸ் வேரியன்டில் மட்டுமே இந்த அம்சம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளிக்கு புதிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு மாருதியின் விக்டோரியஸ் கார் நல்ல வாய்ப்பு தான். இந்த காரின் விலை ரூ9.75 லட்சம் முதல் துவங்குகிறது. இந்த கார் மிகப்பெரிய போட்டி இருக்கும் மார்கெட்டில் களம் இறங்குகிறது. இதனால் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2025, 9:50 [IST]
English summary
Maruti victoris 7 unique features first time highlights
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X