29 கி.மீ மைலேஜ் தரும் காரில் இந்த வேரியன்டிற்கு மட்டும் செம டிமாண்ட்! ஏன் தெரியுமா?

மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தனது விக்டோரிஸ் காரின் டெலிவரியை துவங்கியது.இந்த காரின் புக்கிங் செப்டம்பர் 4ம் தேதியே துவங்கியது. இந்த கார் புக்கிங் துவங்கி 2 மாதமாகும் நிலையில் 30,000 பேர் இந்த காரை வாங்கிவிட்டனர். இதில் சிஎன்ஜி கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் விக்டோரிஸ் என்ற காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த 4ம் தேதி துவங்கியது. இந்த காருக்கான புக்கிங் துவங்கி 2 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 30,000 பேர் இந்த காரை புக் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்இந்த புக்கிங் குறித்த சில விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Maruti Victoris CNG

மொத்தம் நடந்த புக்கிங்கிங் 53 சதவீதம் நேச்சரலிஅஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் வேரியன்டிற்கு குவிந்துள்ளது. 38 சதவீதம் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு புக்கிங் குவிந்துள்ளது. மொத்த விற்பனையில் 11,000 கார்கள் சிஎன்ஜி கார்களுக்கான புக்கிங் குவிந்துள்ளது. ஹூண்டாய் கிரட்டா கார் தான் இந்தகார் விற்பனையாகும் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

கிரெட்டா கார் மொத்தம் 1,94,871 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் 58 சதவீதம் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் வேரியன்ட்களாகவும், 40 சதவீதம் டீசல் இன்ஜின் வாகனமாகவும், 2 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனமாகவும் விற்பவனையாகி வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் இடையேயான வித்தியாசம் தான் கிட்டத்தட்ட பெட்ரோல் சிஎன்ஜி வேரியன்டில் இருக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை.

Maruti Victoris CNG

இதே செக்மெண்டில் மாருதியின் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் ஆகிய காரகளில் சிஎன்ஜி வெர்ஷன் உள்ளது. இது மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. கிராண்ட விட்டாரா கடந்த நிதியாண்டில் காரில் 19 சதவீதம் சிஎன்ஜி கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் விக்டோரிஸ் காரில் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார் விற்பவனையாகி வருகிறது. இதுவெறும் 9 சதவீத விற்பனையை தான் பெற்றுள்ளது.

இ்நதகாரில் 116 எசு்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் பெஆருத்தப்பட்டுள்ளது. இது இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளுது. இந்த கார் ரூ16.38 லட்சம் முதல் ரூ19.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறுது. இந்த கார் 28.65 கி.மீ மைலேஜை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maruti Victoris CNG

இந்த விக்டோரிஸ் காரில் டாப் வேரியன்ட்களான ZXi+, ZXi+(O) வேரியன்ட்கள் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ZXi, ZXi+(O) ஆகிய வேரியன்ட்களும் சேர்த்து ஒட்டுமொத்த புக்கிங்கில் 16 சதவீத புக்கிங்கை பெற்றுள்ளது. இந்த கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பது தெரிகிறது.இந்த காரில் லெவல் 2 அடாஸ் சிஸ்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டீசல் இன்ஜினிற்கு பதிலாக சிஎன்ஜியை மார்கெட்டிற்கு கொண்டு வந்து அதில் மாருதி நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். விக்டோரிஸ் காரில் இவ்வளவு அதிக அளவில் சிஎன்ஜி கார் விற்பனையாகும் எனஅந்நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. இந்த சிஎன்ஃஜி கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 12:40 [IST]
English summary
Maruti victoris cng grabs 38 percent of total bookings
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X