பெட்ரோல் சிஎன்ஜி எல்லாம் ஓரம் போ! மாட்டு சாணத்தை எரிபொருளாக்கி ஓடும் கார் வெளியாகிறது!

மாருதி நிறுவனம் பெட்ரோல், சிஎன்ஜிக்கு மாற்றாக சிபிஜியில் இயங்கும் வாகனத்தை ஜப்பானில் காட்சிப்படுத்தப்படுத்தப்போகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட விக்டோரிஸ் காரின் சிபிஜி வெர்ஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது? இது என்ன சிபிஜி? இதற்கும் சிஎன்ஜிக்கும் என்ன வித்தியாசம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜப்பானில் வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 9 ம்தேதி வரை ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 நிகழ்ச்சி நடக்கிறது. ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடக்கும் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஃபிராக்ஸ் ஃபிளக்ஸ் ஃப்யூயல் காருடன் தனது விக்டோரிஸ் சிபிஜி காரையும் காட்சிப்படுத்துகிறது. சிபிஜி என்றால் கம்பிரஸ்டு பயோ கேஸ் என அர்த்தம். இது சிஎன்ஜியில் இருந்து மாறுபட்டது.

Maruti Victoris Compressed Bio Gas

இந்த சிபிஜிக்காக ஏற்கனவே பயன்படுத்தும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினை தான் அந்நிறுவனம் பயன்படுத்துகிறது. இது87 எச்பி பவரையும் 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறண் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் பெட்ரோல், சிஎன்ஜி, ஹைபிரிட், எலெக்ட்ரிக் கார்கள் போல சிபிஜி காரையும் பரவலாக்க முடிவு செய்துள்ளது.

இந்த சிபிஜி எரிபொருளை பயன்படுத்த கிட்டத்தட்ட சிஎன்ஜி பயன்படுத்தப்படும் அதே தொழிற்நுட்பம் தான். ஒரு சில விஷயங்கள் மட்டும் மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜிக்கும் சிபிஜிக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. கேஸ் அடிப்படையில் இன்றும் ஒன்று தான். ஆனால் இது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதில்தான் வேறுபடுகிறது.

Maruti Victoris Compressed Bio Gas

சிஎன்ஜி எரிபொருள் பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட நேரச்சுரல் கேஸாக எடுக்கப்படுகிறது. சிபிஜி என்பது இயற்கையான கழிவுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. உதாரணமாக விவசாய கழிவகள், கால்நடைகழிவுகள், கழிவு நீர் ஓடை கழிவுகள், முனிசிபல் கார்பரேஷன் மூலம் அப்புறப்படுத்தப்படும் கழிவுகளில் இருந்து எடுக்கப்படுகிறது.

இப்படியாக எடுக்கப்படும் கழிவுகளிலிருந்து கேஸ் வெளியேற்றப்பட்டு அதில் படிப்படியாக மீத்தேன் அளவு அதிகமாகும் அளவிற்கு சுத்திகரிக்கப்பட்டும் அப்பொழுது அதில் உள்ள கார்பன் டைஆக்ஸைடு குறைக்கப்படும். இப்படியாக கிட்டத்தட்ட சிஎன்ஜி எரிபொருள் அளவிற்கு இது தரம் உயர்த்தப்படும். இது நேரடியாக விவசாய கழிவுகளில் இருந்து எடுக்கப்படுவதால் இதில் பூமியை பாழாக்கும் விஷயம் நடக்காது. மாறாக பூமி இதனால் சுத்தமாகும். குப்பைகள் குறையும்.

ஒரு நாளுக்கு 10 மாடுகள் வெளியிடும் கழிவுகள் 1 காரை ஒரு நாள் ஓட வைக்கும் அளவிற்கு கேஸ் பெற உதவியாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் 30 கோடி மாடுகள் பயன்பாட்டில் உள்ளன. அதை வைத்து 3 கோடி வாகனங்களுக்கான கேஸை நம்மால் எடுக்க முடியும். இந்த திட்டத்தால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வருமானம் பெருகும் என சொல்லப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகள் எரிபொருளுக்காக மற்ற நாட்டை சார்ந்திருக்க வேண்டிய தேவையை குறைக்க யோசித்து வரும் நிலையில் இந்த சிபிஜி எரிபொருள் பெரிய அளுவில் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியாவில் உள்ள விவசாயத்தை கணக்கிட்டால் நமக்கானதேவை போக மீதியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நாம் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 11:50 [IST]
English summary
Maruti victoris compressed bio gas cbg launch soon
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+