28 கி.மீ மைலேஜ் தரும் காரின் டெலிவரி இன்று துவங்குகிறது! விலையும் இவ்வளவு கம்மி தானா?
மாருதி நிறுவனம் தனது விக்டோரிஸ் என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் டெலிவரி இன்ற துவங்குகிறது. இ்நத் கார் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் சமீபத்ததில் தான் விக்டோரிஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்நிலையில் இன்று ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்க வந்துள்ள நிலையில் இன்று முதல் இந்த காரின் டெலி வரி துவங்கியுள்ளது.

மாரதி நிறுவனம் இந்த காரின் விலையை ரூ10.50 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ19.98லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட காராக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஏகப்பட்ட மக்கள் இந்த காரை விரும்பி வாங்க துவங்கிவிட்டனர்.
மாரதி நிறுவனம் இந்த காரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், கனெக்டெட்ட பின்பக்க டெயில் லைட்டுகள், ஷார்க் ஃபின் ஆண்டனா, 26.03 செ.மீ அளவு கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிஎன்ஜி வேரியன்டில் பாடிக்கு கீழ் பகுதியில் சிஎன்ஜி டேங்க், டால்பி அட்மாஸ் சிஸ்டம், கெஸ்டர் கண்ட்ரோல் டெயில் கேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மேலும் இ்நத காரில் அலெக்ஸா ஆட்டோ வாய்ஸ் அசிஸ்டென்ட், 35 கனெக்டெட் கார் அம்சங்கள், பானரோமிக் சன் ரூஃப், வென்டிலேட்டட் சீட்டுகள், உட்புறம் கருப்பு, கிரே மற்றும் சில்வர் நிற தீம்களில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.
இ்நத காரில் 5 ஸ்டார் ரேட்டிங் உள்ளது. இந்த கார் பாரத் என்கேப் மற்றும் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரில் ஏபிஎஸ், இபிடி, ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட விஷயங்கள் உள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பொட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 250 எச்பிவ பவரையும் 100 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் ஸ்டிராங்க் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களும் உள்ளது. இது இந்த காரை அதிக மைலேஜ் தரும் காராக மாற்றுகிறது.
இந்த கார் மார்கெட்டில் விற்பனையாகி வரும் மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், ஹோண்டா எலெவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.
இந்த காரின் சிறப்பம்சமே இதன் மைலேஜ் தான் தான் இந்த கார் பெட்ரோல் மேனுவலில் 21.18 கி.மீ மைலேஜையும், பெட்ரோல் ஆட்டோமெட்டிக்கில் 21.06 கி.மீ மைலேஜையும், பெட்ரோல் ஆட்டோமெட்டிக் ஆல் வீல் டிரைவ் வேரியன்டில் 19.07 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜி மேனுவலில் 27.02 கி.மீ மைலேஜையும், ஹைபிரிட் சிவிடி வேரியன்ட் 28.65 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களில் இந்த காரும் ஒன்றாக இருக்கிறது. இதுவும் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளதால் இந்த காரின் விலை குறைவாக இருப்பதாலும் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









