30 நாள் கூட ஆகல, அதுக்குள்ள இந்த காரின் விலையை உயர்த்திய மாருதி!
மாருதி நிறுவனம் தனது விட்டோரிஸ் என்ற காரை கடந்த செப்டம்பர் மாதம் தான் அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திடீரென அந்த காரின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்த காரின் விலை ஏற்றம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் விக்டோரிஸ் சென்ற பெயரில் புதிய கார் ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது ஜிஎஸ்டி வரிகுறிப்பு நாளில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த கார் மிகப்பெரிய விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது விளையும் குறைவாக இருந்ததால் பலன் இந்த காரை புக்கிங் செய்தனர் இந்நிலையில் இந்த காரின் டாப் ஏரியின் விலையை தற்போது நிறுவனம் உயர்த்தி உள்ளது.

மாருதி நிறுவனத்தின் விக்டோரிஸ் காரை பொறுத்த வரை மொத்தம் ஆறு விதமான வேரியன்ட்களில் உள்ளன இதில் மெயில் ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இருக்கிறது இந்நிலையில் இந்த காரின் இசட் எக்ஸ் ஐ ப்ளஸ் வீடு மேனுவல் மற்றும் விலையை தர 15000 வரை உயர்த்தி உள்ளது. இதனால் இந்த காரை புக் செய்தவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இந்த கார் அறிமுகமாகி ஒரே மாதத்திற்குள் விலை உயர்வை சந்தித்துள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மாருதி நிறுவனம் இந்த விக்டோரிஸ் காரை தனது அரேனா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூ10.50 லட்சம் முதல் ரூ19.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறைவான விலையில் அறிமுகமானதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி புக் செய்து வருகிறார்கள். இந்த செக்மெண்டிலேயே சிறப்பாக புக்கிங் நடைபெறும் காராக இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் துவங்கிய சில நாட்களிலேயே 25,000 பேர் இந்த காரை புக் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
மாருதி நிறுவனத்தின் விக்டோரிஸ் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103.6 பிஎஸ் பவரையும் 139 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஹைபிரிட் இன்ஜின் 92.45 பிஎஸ் பவரையும் 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாருதி விட்டோரிஸ் காரின் மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோல் வேரியண்டில் 21 கிலோமீட்டர் மைலேஜ், ஹைபிரிட் இசிவிடி வேரியண்டில் 28.65 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த காரில் சிஎன்ஜி டேங்க் காருக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பூட் ஸ்பேஸ் இருக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4360 மிமீ நீளமும் 1795 மிமீ அகலமும் 1655 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதுபோக 2600 மீமி வீல் பேஸூம் இந்த காரில் இருக்கிறது.
இந்த காரின் உள்ளே 10 .1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கிறது. மேலும் இந்த காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் முன்பக்க சீட்டுகள் வென்டிலேட்டட் சீட்களாக உள்ளன. பின் பக்கத்தில் கேட் கெஸ்டர் கண்ட்ரோல் செட்டப்புடன் இருக்கிறது. இதுபோக ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் 6 ஏர் பேக்குகள், லெவல் டு அடாஸ், 8 ஸ்பீக்கர் கொண்ட டால்பி அட்மாஸ் சவுண்ட்சிஸ்டம், எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் சீட்டு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விக்டோரிஸ் கார் செக்மெண்டில் ஏகப்பட்ட போட்டி இருக்கிறது. இருந்தாலும் மாருதி கார் என்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வரும் நிலையில் டாப் வேரியண்டின் விலையை திடீரென நிறுவனம் உயர்த்தியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மாதத்திற்கு விலையேற்றத்தை கண்டுள்ளது. இந்த காருக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் இருக்கிறது. இந்த காரை இப்பொழுதே வாங்கினால் குறைந்த விலையில் வாங்க முடியும். புத்தாண்டுக்குள் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








