5 ஸ்டார் ரேட்டிங், கம்மி வேரியன்ட்லேயே ஏகப்பட்ட வசதிகள் குடுத்தா யாரு தான் இந்த காரை வாங்க மாட்டாங்க?

மாருதி நிறுவனம் விக்டோரியஸ் என்ற காரை சமீபத்தில் அறிமகப்படுத்தியது. இந்த கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ (ஓ), இசட் எக்ஸ்ஐ+ மற்றம் இசட் எக்ஸ்ஐ + (ஓ) ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் பாரத் என்கேப் சோதனையில் 5 றா்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின்வேரியன்ட் வாரியிலான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் விக்டோரியஸ் என்ற மிட்சைஸ் எஸ்யூவி காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுளு்ளது. இந்த கார் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு இடையே பேசிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 10 விதான கர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி மெட்டாலிக் கிரீன், எட்டர்னல் ப்ளூ, சிஸிலிங் ரெட், மேக்மா கிரே, ஸ்பிளின்டிட் சில்வர், ஆர்டிக் ஒயிட், ப்ளூயிஷ் பிளாக், டுயல் கலரில் எட்டர்னல் ப்ளூ வித் ப்ளூயிஷ் பிளாக், சிஸிலிங் ரெட் வித் ப்ளூயிஷ் பிளாக், ஸ்பிளின்டிட் சில்வர் வித் ப்ளூயிஷ் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

maruti victorious Variant wise details

இந்த கார் மொத்தம் 6 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. இது போக 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களும் உள்ளன. இந்த காரில் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ, இஎக்ஸ்ஐ(ஓ), இசட்எக்ஸ்ஐ+ மற்றும் இசட்எக்ஸ்+(ஓ) ஆகிய வேரினயட்கள் உள்ளது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக், இசிவிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ன்கள் உள்ளன. இந்த கார் ஸ்டிராங் ஹைபிரிட் காராகவும் வருகிறது. 4 விதமான டெரைன் ஆப்ஷன்கள், 3 டிரைவ் மோடுகள் இந்த காரில் உள்ளன.

இந்த கார் பாரத் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 31.66 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 43 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளன. இது போக 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

maruti victorious Variant wise details

இந்த காரில் 1.5 லிட்டர் கே சிரீஸ் விவிடி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103.06 பிஎஸ் பவரையும், 139 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்டிராங்க் ஹைபிரிட் உடன் இணைந்து 92.45 பிஎஸ் பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 19-21 கி.மீ மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியர் பாக்ஸிற்கு ஏற்றவாறு மைலேஜ் மாறுபடும். ஹைபிரிட் கார் 28.65 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜி வேரியன்ட் 27.02 கி.மீ மைலேஜையும், வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4360 மிமீ நீளமும், 1655 மிமீ உயரமும், 1795 மிமீ அகலமும், 2600 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இனி வேரியன்ட் வாரியிலான விபரங்களை காணலாம்.

maruti victorious Variant wise details

மாருதி விக்டோரியஸ் எல்எக்ஸ்ஐ வேரியன்ட் காரை பொருத்தவரை 17 இன்ச் ஸ்டீல் வீல், டில்ட் மற்றும் டெலஸ் கோபிக் ஸ்டியரிங் அட்ஜெஸ்ட்மென்ட், புஷ் ஸ்டார்ட் ஸ்டாப் ஃபங்சன், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் பின்பக்க ஏசி வென்ட்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட,ர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கீலெ என்ட்ரி, ஹாலஜன் ஹெட்லைட், ஸ்டிரியிங் மவுண்ட்டட் ஆடியோ மற்றும் கால் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், இபிடி பிரேக் அசிஸ்ட் உடன் கூடிய ஏபிஎஸ், டுயல் ஸ்பீக்கர், ஓடிஏ அப்டேட், பின்பக்கம் 60:40 ஸ்பிலிட் சீட், டே/நைட் ஐஆர்விஎம், இஎஸ்பி, டிராக்ஷன் கண்ட்ரோல், எல்இடி டெயில் லைட், ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மாருதி விட்டோரியஸ் விஎக்ஸ்ஐ காரை பொருத்தவரை எல்எக்ஸ்ஐ காரில் உள்ளதை விட கூடுதலாக எலெக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ஓஆர்விஎம், ஸ்டியரிங் மவுண்ட்டட் க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டெட்ட எல்இடி டெயில் லைட், எலெக்டரானிக் பார்க்கிங் ஆட்டோ ஹோண்ல்டு, ரூஃப் ரெயில்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏவிஏஎஸ், பெடல் ஸிஃப்டர்கள், சீட் உயுரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன், எக்கோ, நார்மல், ஸ்போர்ட் ஆகிய டிரைவ் மோடுகள், பின்பக்க பார்க்கிங் கேமரா, பிஎம் 2.5 ஏர்ஃபில்டர், ஆகிய அம்சங்கள் உள்ளன.

மாருதி விக்டோரியஸ் இசட்எக்ஸ்ஐ வேரியன்டை பொருத்தவரை விஎக்ஸ்ஐ வேரியன்டில் உள்ளது போககூடுதலாக , கெஸ்டர் கண்ட்ரோல் உடன் கூடிய பவர்டு டெயில் கேட், பின்பக்க வைப்பர் மற்றும் வாஷர்கள், சாஃப்ட் டச் டேஷ் போர்டு ஃபினிஷ், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 17 இன்ச் கருப்பு ஆலாய் வீல்கள், லேதர் சீட்கள், கிரே ஸ்கிட் பிளேட், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆட்டோ எல்இடி புரொஜெக்டர் ஃபாலோமீ ஹோம் ஆப்ஷன் உடன் இருக்கிறது. இது போக எல்இடி டிஆர்எல், எல்இடி ஃபாக் லேம்ப்கள், உள்ளன. இதில் இசட்எக்ஸ்ஐ (ஓ) காரில் கூடுதலாக பானரோமிக் சன் ரூஃப் ஆப்ஷன் இருக்கிறது.

மாருதி விக்டோரியஸ் இசட்எக்ஸ்ஐ + வேரியன்டில் இன்டர்நெட் கனெக்டெட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, முன்பக்கம் வென்டிலேட்டட் சீட்டுகள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்க்கூடிய டிரைவர் சீட், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்சென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கம் கொண்ட இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், சப் வூஃபர்கள், ஸ்னோ, ஸ்போர்ட், லாக், ஆட்டோ ஆகிய டெரைன் மோடுகள், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், 64 கலர் கேபின் லைட், பிரிமியர் ஏர் ஃப்யூரிபயர், 17 இன்ச் அலாய் வீல்கள், டால்பி அட்மாஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் இசட் எக்ஸ்ஐ +(ஓ) வேரியன்டில் கூடுதலாக பானேரோமிக் சன் ரூப் மட்டும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் விக்டோரியஸ் காரை வாங்க நினைப்பவர்கள் எந்த வேரியன்டை வாங்குவது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு தெளிவை வழங்கவே இந்த தகவல்களை வழங்கியுள்ளோம். இது நிச்சயம் உங்களுக்க பயனுள்ளதாக இருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, September 5, 2025, 9:25 [IST]
English summary
Maruti victorious variant wise features colours specs more details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X