ஒரு கி.மீ பயணிக்க ரூ2 தான் செலவாகும்! 40 கி.மீ மைலேஜ் தரும் வேகன் ஆர் காரை ரெடி பண்ணிட்டாங்க!

நம்பகத்தன்மை மற்றும் வசதிகாக இந்தியாவில் பிரபலமான மாருதி வேகன்ஆர் கார், புதிய முழுமையான ஹைப்ரிட் மாடல் மூலம் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெறவுள்ளது. இந்த வரவிருக்கும் எடிசன் மேம்படுத்தப்பட்ட மைலேஜ் மற்றும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இது உலகின் முன்னணி மினி ஹைப்ரிட் காராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. . சுஸூகி இந்த புதிய தலைமுறை வேகன்ஆர் காரை ஜப்பானில் இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமீபத்திய வேகன்ஆர், சொலிரியோவில் உள்ளதைப் போன்ற சுஸூகியின் வலுவான ஹைப்ரிட் சிஸ்டத்தை கொண்டிருக்கும். இது 660cc, இன்லைன் 3-சிலிண்டர் DOHC பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். இது 54PS பவர் மற்றும் 58Nm டார்க் திறனை உருவாக்கும். 10PS பவர் மற்றும் 29Nm டார்க் திறனை உருவாக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் இந்த செட்டப் உடன் பொருத்தப்படும். இந்த செட்டப் எலெக்ட்ரிக் சிவிடி கியர் பாக்ஸ் (இ-சிவிடி) உடன் இணைக்கப்படும்.

ஹைப்ரிட் தொழிற்நுட்பத்துடன் கூடுதலாக, வேகன்ஆர் பல அப்டேட்களைப் பெறும். ஸ்லைடிங் கதவுகள் தரமான பின்புற கதவுகளை மாற்றும். இது பல ஜப்பானிய ஹேட்ச்பேக் கார்களில் பொதுவான அம்சமாகும். இந்த மாற்றம் சுலமான டிரைவிங் மற்றும் எளிதான அதிக எடையை எடுத்து செல்லும் வகையில் இந்த வாகனத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. கூடுதல் வசதிக்காக சரிசெய்யக்கூடிய சீட் ஆப்ஷன்கள் கிடைக்கும். இந்த கார் 30 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் ஹைபிரிட் கார் அறிமுகமானால் 40 கி.மீ மைலேஜ் கூட கிடைக்க வாய்ப்புள்ளது

வேகன்ஆரின் ஜப்பானிய எடிசன் 3,395 மி.மீ நீளம், 1,475 மி.மீ அகலம் மற்றும் 1,650 மி.மீ உயரம் கொண்டது. இது 2,460 மி.மீ வீல் பேஸை கொண்டிருக்கிறது மற்றும் சுமார் 850 கிலோ எடை கொண்டது. ஜப்பானில், இந்த முழு ஹைப்ரிட் மாடலுக்கான விலை சுமார் 1.3 மில்லியன் யென் (சுமார் ரூ. 7.65 லட்சம்) என விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். டாப் வேரியன்ட் 1.9 மில்லியன் யென் (சுமார் ரூ. 11.19 லட்சம்) வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் ஸ்டிராங்க் ஹைபிரிட் உடன் விற்பனைக்கு வந்தால் கி.மீ மைலேஜ் கொடுக்கும் பட்சத்தில் ஒரு கி.மீ பயணிக்க ரூ2 தான் செலவாகும்

மாரூதி வேகன்ஆர் போன்ற சிறிய வாகனங்களுக்காக இந்தியாவில் குறைந்த விலை ஹைப்ரிட் செட்டப்பை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டாவின் ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஒரு ஆப்ஷனாக இருந்தாலும், டொயோட்டாவின் அதிக விலையால், மாரூதி குறைந்த விலை காரை தயாரிக்க முடியாது. இதனால் சொந்தமாக ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை தான் உருவாக்கும் என எதிர்பார்க்க முடிகிறது

இந்தியாவில் மாரூதியின் ஹைப்ரிட் கார்கள் அறிமுகம் பெரும்பாலும் தற்போது விற்பனையாகும் ஹைபிரிட் கார்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் அரசாங்க கொள்கைகளை சார்ந்துள்ளது. உதாரணமாக, இவி கார்களுக்கு பல மாநிலங்களில் 5% மட்டுமே ஜிஎஸ்டி மற்றும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு பெறுகின்றன.இதனால் ஹைபிரிட் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் தான் அதிகம் விற்பனையாக வாய்ப்புள்ளது

Maruti Wagonr Hybrid

ஹைப்ரிட் கார்கள் 43% மொத்த வரி சுமைக்கு உட்பட்டுள்ளன. இதில் 28% ஜிஎஸ்டி மற்றும் கூடுதலாக 15% செஸ் உள்ளிட்ட வரிகள் இருக்கிறது. உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் ஹைப்ரிட்களுக்கு பதிவு வரிகளை ரத்து செய்துள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இந்த வாகனங்கள் குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கும்.

ஸ்டிராங் ஹைப்ரிட்களில் வரி குறைப்பு ஏற்பட்டால், வேகன்ஆர் போன்ற மாடல்கள் குறைந்த விலையில் சிறந்த மைலேஜை கொடுப்பதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த வாகனங்கள் இருக்கும். இதனால் விற்பனை கணிசமாக அதிகரிக்கும்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமுறை வேகன்ஆர் முழு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை உறுதியளிக்கிறது. அதன் ஜப்பானிய அறிமுகம் இந்தாண்டு இறுதிக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இருப்பினும், இந்தியாவில் அதன் வருகை அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் மாருதியின் உத்திமுறைகளை சார்ந்துள்ளது. இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் நிச்சயம் விற்பனை அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2025, 11:00 [IST]
English summary
The Maruti WagonR is set for a significant return with a new full hybrid model in Japan, featuring advanced technology and improved mileage, while plans for the Indian market depend on government policies.
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X