34 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை 1.65 லட்சம் பேர் வாங்கிட்டாங்க! அப்படி இந்த காரில் என்னதான் இருக்கிறது?

மாருதி நிறுவனத்தின் பிரபலமான காரான வேகன்ஆர் கார் கடந்த 10 மாதங்களில் 1.65 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இந்த கார் நீண்ட காலமாக சிறப்பான விற்பனையில் இருக்கும் நிலையில் தற்போதும் இந்த காரின் விற்பனை குறையாமல் இருக்க என்ன காரணம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக வேகன் ஆர் என்ற ஹேட்ச்பேக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் இந்த 2025ம் ஆண்டிலும் சிறப்பான விற்பனையை பெற்றுள வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் தான் இருப்பதிலேயே அதிகமான விற்பனையை பெற்றது. அந்த மாத்ததில் மட்டுமு் மொத்தம் 24,000 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

Maruti WagonR Sales CY2025

குறைந்த விற்பனையை கடந்த ஜூன் மாதம் பதிவு செய்தது. மொத்தம் 12930 வாகனங்கள் விற்பவனையாகியள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோர் வரையிலான விற்பவனையை பார்கஅகம் போது மொத்தம் 1,65,044 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முன்னரே சொன்னதுபடி ஜனவரி மாதம் 24,078 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

பிப்ரவரி மாதம் 19.879 கார்களும், மார்ச் மாதம் 17,175 கார்களும், ஏப்ரல் மாதம் 13,413 கார்களும், மே மாதம் 13,949 கார்களும், ஜூன் மாதம் 12,930 கார்களும், ஜூலை மாதம் 14710 கார்குளும், ஆகஸ்ட் மாதம் 14,552 கார்களும், செப்டம்பர் மாதம் 15,388 கார்களம், அக்டோபர் மாதம் 18970 கார்களும் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 1,65,044 கார்கள் கடந்த 10 மாதத்தில் விற்பனையாகியுள்ளது.

Maruti WagonR Sales CY2025

இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டியரிங் மவுண்ட் ஆடியோ, போன் கண்ட்ரோல், 14 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக இந்த காரில் முன்பக்கம் 2 ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் உள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ4.99 லட்சம் முதல் ரூ6.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறுது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2 விதமான இன்ஜின் ஆப்ஷவன்கள் உள்ளன. அதன்படி 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 67 பிஎச்பி பவர் மற்றும் 89 என்எம்டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 90 பிஎச்பி பவரிலும், 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

Maruti WagonR Sales CY2025

இந்த காரில் சிஎன்ஜி வேரயன்டும் விற்பனையாகிறது. இது அதிக மைலேஜை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34 கி.மீ வரை மைலேஜை வழங்குகிறது. அதிக மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் முதன் முறையாக கார் வாங்குபவர்களின் முக்கிய தேர்வாக இருக்கிறது. குடும்பத்துடன் பயணிக்கவும், சிறிய பயன்பாட்டிற்கு ஏற்ற கார், இந்த காரின் உயரம், பிராக்டிக்கல் அம்சம் ஆகியவற்றை பார்க்கும் போது இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தொடர்ந்து சிறப்பான விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 23, 2025, 14:26 [IST]
English summary
Maruti wagonr sales cy2025 165k units jan oct
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X