அந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு இவ்வளவு பெரிய மகளா? தந்தை-மகள் மஹிந்திராவை ஒருவழி பண்ணாம விட மாட்டாங்க போல!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்திற்கு முக்கியமான சந்தைகளுள் ஒன்று, ஆஸ்திரேலியா (Australia) ஆகும். இந்தியாவை போன்று பெரிய கார் சந்தையான ஆஸ்திரேலியாவில் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அதே எக்ஸ்யூவி700 (XUV700), ஸ்கார்பியோ-என் (Scorpio-N) கார்கள் மூலமாக கவனிக்கத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவில் மஹிந்திரா நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டிருப்பதற்கு மற்றொரு காரணம், அந்த நாட்டிற்கான பிராண்ட் தூதராக பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் (Matthew Hayden) அவர்களை மஹிந்திரா நிறுவனம் நியமித்தது ஆகும். ஏனெனில், மஹிந்திரா கார்கள் ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமாகி இருப்பதற்கு மேத்யூ ஹைடனின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

matthew hayden daughter grace hayden

2015ஆம் ஆண்டில் மஹிந்திராவின் ஆஸ்திரேலிய நாட்டிற்கான பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்ட மேத்யூ ஹைடன் பல மஹிந்திரா கார்களை நாடு முழுவதும் விளம்பரப்படுத்தி உள்ளார். இந்தியாவை போன்று ஆஸ்திரேலியாவிலும் கிரிக்கெட் (Cricket) விளையாட்டின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதால், மேத்யூ ஹைடன் கூறும் வார்த்தைகளை ஆஸ்திரேலிய மக்கள் கவனத்துடன் கேட்கின்றனர்.

மேத்யூ ஹைடன் மட்டுமின்றி, அவரது மகள் கிரேஸ் ஹைடன் (Grace Hayden) அவர்களும் ஆஸ்திரேலியாவில் மஹிந்திரா கார்களை விளம்பரப்படுத்துவதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். இந்த அப்பா-மகள் ஜோடி தான் ஆஸ்திரேலியாவில் மஹிந்திராவின் முகமாக உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் புதியதாக விற்பனைக்கு வந்துள்ள மஹிந்திரா காரை கிரேஸ் ஹைடன் விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

matthew hayden daughter grace hayden

மஹிந்திரா ஆஸ்திரேலியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், கிரேஸ் ஹைடனையும் அவருடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) காரையும் காணலாம். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காருக்கு மாற்றாக இந்தியாவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இந்த ஜூலை மாத துவக்கத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அளவில் சிறியதான முதல் மஹிந்திரா காராக மார்க்கெட்டிற்கு வந்திருக்கும் இதனை ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் முயற்சியாகவே, கிரேஸ் ஹைடன் இந்த காரை விவரிக்கும் வீடியோவை அங்குள்ள மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீடியோவில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் தன்னை கவர்ந்த விஷயங்களை ஒவ்வொன்றாக கூறியுள்ள கிரேஸ் ஹைடன், மஹிந்திராவின் புதிய பட்டாம்பூச்சி டிசைனிலான லோகோ காரின் கிரில் பகுதி உடன் நன்கு ஒத்துப்போய் உள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர், காருக்குள் அமர்ந்து கேபினில் இருக்கும் தொழிற்நுட்ப அம்சங்களையும் கிரேஸ் ஹைடன் விளக்கி கூறியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சி ஆஸ்திரேலியாவில் நன்கு வேகமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு மேத்யூ ஹைடன் மற்றும் கிரேஸ் ஹைடனின் பங்களிப்பு முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் கிரேஸ் ஹைடன் விளம்பரப்படுத்திய மஹிந்திரா கார்கள் நன்கு வரவேற்பை பெற்றுள்ளதால், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.

Source: Mahindra Australia/ Youtube (https://www.youtube.com/@MahindraAus)

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2025, 11:00 [IST]
English summary
Matthew hayden daughter grace hayden with mahindra xuv 3xo suv car
மேலும்... #mahindra #suv car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+