சாலையில் சென்றவங்களுக்கு என்ன நடக்குதுனே புரியல! ரஜினி படத்துல வர்ர சுவரில் ஓடக்கூடிய கார் நிஜத்தில் வந்தாச்சு

முதல்முறையாக கார் உருவாக்கப்பட்ட சமயத்தில், அதாவது 100 வருடங்களுக்கு முன்னர் அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள் எதிர்காலத்தில் கார்கள் சுவர்களிலும், மேற்கூரையில் அந்தரத்திலும் இயங்கக்கூடியவை ஆக இருக்கும் என நினைத்தனர். அதாவது, எதிர்காலத்தில் பறக்கும் கார்கள் தான் அதிகமாக இருக்கும் என தற்போது நாம் நினைப்பதை போல.

ஆனால், சுவர்களில் ஏறக்கூடிய, தலைக்கீழாக இயங்கக்கூடிய கார்கள் 100 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் இப்போது வரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஏனெனில் நமக்கு அத்தகைய கார்கள் தேவைப்படவில்லை. ஆனால், வெளிநாட்டில் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்று அந்தரத்தில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் தொடர்பாக யூடியூப் (youtube)இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

mcmurtry speirling pure vp1 hypercar

இந்த காரை உருவாக்கியுள்ள நிறுவனத்தின் பெயர், மெக்மர்ட்ரி ஆட்டோமோட்டிவ் (McMurtry Automotive) ஆகும். எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய ஹைப்பர் கார்களை (Hypercars) உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் உலகில் ஏகப்பட்டவை செயல்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான், மெக்மர்ட்ரி ஆட்டோமோட்டிவ் ஆகும். 'ஸ்பெயிர்லிங் பியூர் விபி1' (Speirling PURE VP1) என்கிற பெயரிலான ஹைப்பர் கார் ஒன்றை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.

மிகவும் தாழ்வான உடலமைப்புடன், அதிவேகத்தில் இயங்கக்கூடியவை ஹைப்பர் கார்கள் எனப்படுகின்றன. வழக்கமான அதிவேக கார்களில் இருந்து வித்தியாசமான தோற்றத்தை ஹைப்பர் கார்கள் பெறுகின்றன. இவ்வாறான ஹைப்பர் கார்களை உருவாக்கிவரும் நிறுவனங்கள் ஏகப்பட்டவை இருந்தாலும், மெக்மர்ட்ரியின் ஸ்பெயிர்லிங் பியூர் விபி1 ஆனது அவை அனைத்தை காட்டிலும் ஒரு விஷயத்தில் முற்றிலும் வேறுப்பட்ட காராக உள்ளது.

mcmurtry speirling pure vp1 hypercar

இதற்கு முக்கிய காரணம், அந்தரத்திலும் இயங்கக்கூடிய இந்த காரின் திறன் ஆகும். இதற்காக, கீழ்நோக்கிய ஈர்ப்புவிசையை தேவைக்கேற்ப வழங்கக்கூடிய தொழிற்நுட்பம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விசித்திரமான திறன் கொண்ட கார் சமீபத்தில் இங்கிலாந்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், 360 கோணத்திற்கு சுழலக்கூடிய ஒரு மேடையில் இந்த ஹைப்பர்காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதாவது, காரை மேடையில் நிறுத்திய பின், அந்த மேடையை 360 கோணத்திற்கு சுழல செய்தனர். இதனால், கார் தலைக்கீழாக தொங்கியது. இருப்பினும், கார் கீழே விழவில்லை. நிறுத்தப்பட்ட மேடையிலேயே ஆணி அடித்தாற் போன்று தலைக்கீழாக கார் தொங்கியது. நேரெதிர் திசையில் தலைக்கீழாக தொங்கவிட்ட போதிலும், கீழே விழாமல் இருக்க கார் 2000 கிலோ விசையை அந்த சமயத்தில் உருவாக்கி கொண்டதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இவ்வளவு அதிக விசையை உண்டாக்கிய சமயத்தில் கார் ஓய்வில் இருந்தது. அதாவது, காரின் வேகம் பூஜ்ஜியம் ஆகும். இதன்பின், காரை முன்னும், பின்னும் இயக்கி பார்த்தும் சோதனை செய்தனர். மெக்மர்ட்ரி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் இந்த ஸ்பெயிர்லிங் பியூர் விபி1 ஹைப்பர் கார் தற்போதைக்கு சோதனை பணிகளில் மட்டுமே உள்ளது.

காரின் அறிமுகம் அடுத்த 2026ஆம் ஆண்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக, ஃபார்முலா-1 (Formula-1) கார் பந்தயத்தை மனதில் வைத்து இந்த ஹைப்பர் கார் உருவாக்கப்பட்டுள்ளது. மெக்மர்ட்ரி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் துணை நிறுவனர் தாமஸ் யாதேஸ் (Thomas Yates) தனது கைப்பட இந்த காரை ஓட்டி பார்த்து சோதனை செய்தார்.

ரேசிங் கியரில் (Racing Gear) அவர் இந்த ஹைப்பர் காரை ஓட்டி பார்த்து சோதனை செய்தார். ஃபார்முலா-1 போன்ற பந்தயத்திற்கு இந்த ஸ்பெயிர்லிங் பியூர் விபி1 கார் மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், ஃபார்முலா-1 பந்தயத்தில் சில இடங்களில் சாலைகள் மிகவும் செங்குத்தாக உள்ளன. அத்தகைய சாலைகளில் இவ்வாறான கார்கள் மிகவும் ஏற்றவை ஆக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்தரத்திலும் இயங்கக்கூடிய கார்களுக்கான தேவை எதிர்காலத்தில் ஏற்படலாம். ஏனெனில், இவ்வாறான கார்களை சுரங்கப்பாதைகளுக்குள் மேற்கூரையில் ஓட்டி, போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைவாக வெளியேறலாம். ஆனால், இவ்வாறான கார்களில் எலக்ட்ரிக் மோட்டாரின் வேலை அதிகமாக இருக்கும் என்பதை மறவாதீர்கள். இதனால், இவ்வாறான எலக்ட்ரிக் கார்கள் வழக்கத்தை காட்டிலும் பேட்டரியின் ஆற்றலை அதிகம் பயன்படுத்தக் கூடியவைகளாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2025, 22:04 [IST]
English summary
Mcmurtry speirling pure vp1 electric hypercar tested on 360 degree rotating platform
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+