கோடி கணக்குல காசு வெச்சு இருந்தாலும் வாங்குறது கஷ்டம்! காரின் விலை ரூ.4.30 கோடி தான், ஆனால்...!
மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமாக இருக்கும் வாகனங்களுள் ஒன்று, ஜி-வேகன் (G-Wagen) ஆகும். வழக்கமான மெர்சிடிஸ் கார்களை போல் இல்லாமல், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப சிறந்த செயல்படுதிறன் உடன், அதேநேரம் லக்சரியான உட்பக்க கேபினை கொண்டவை ஜி-வேகன் ஆகும். பெட்டகம் வடிவிலான தோற்றத்தை கொண்டிருப்பதால், இந்த மெர்சிடிஸ் வாகனத்திற்குள் இடவசதியும் அதிகமாக கிடைப்பதால் வெளிநாடுகள் பலவற்றில் மெர்சிடிஸ் ஜி-வேகன் வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவிலும் கூட.
மெர்சிடிஸ் வாகனங்கள் பென்ஸ், ஏஎம்ஜி, மேபக் என மூன்று விதமான பிரிவுகளின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் பிரிவில் ஜி-வேகன் வாகனம் ஆனது ஜி-கிளாஸ் (G-Class) என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஜி-வேகன் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை குறைவாகும்.

விலை குறைவு என்றதும் மிகவும் குறைவானது என நினைத்துவிட வேண்டாம்... ஏனெனில் ஜி-கிளாஸின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே தற்சமயம் ரூ.2.5 கோடி என்கிற அளவில் உள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிரிவின் கீழ் ஜி63 (G63) என்கிற பெயரில் ஜி-வேகன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்தில்தான் தற்போது புதியதாக கலெக்டர்ஸ் எடிசன் (Collector's Edition) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெயருக்கேற்ப, உலகின் அரிதான கார்களை வாங்கி சேகரிக்கக்கூடிய பணக்காரர்களை டார்க்கெட் செய்து இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வெறும் 30 ஜி63 கலெக்டர்ஸ் எடிசன் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய போவதாக மெர்சிடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 30 கலெக்டர்ஸ் எடிசன்களும் ஒவ்வொரு விதமான குறியீடுகளை பின்பக்கத்தில் பொருத்தப்படும் ஸ்பேர் சக்கரத்திற்கான கவரில் கொண்டிருக்கும்.
அதேபோல், வாகனத்தின் பக்கவாட்டில் உராய்வுகளில் இருந்து பாதுகாக்க வழங்கப்படும் ஸ்ட்ரிப்பில் 30 வாகனங்களும் தங்களுக்கு என தனித்துவமான ஃபினிஷிங்கை பெற உள்ளன. இத்தகைய சிறப்புமிக்க புதிய ஸ்பெஷல் எடிசன் ஜி63 வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்தின் விலையை காட்டிலும் சுமார் ரூ.66 லட்சம் அதிகமாகும்.
புதிய ஜி63 கலெக்டர்ஸ் எடிசனுக்கு இந்தியாவில் முன்பதிவுகள் இன்று (ஜூன் 12) துவங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்பவர்களுக்கு வாகனத்தை டெலிவிரி கொடுக்கும் பணிகள் அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என மெர்சிடிஸ் அறிவித்துள்ளது. பொதுவாக, கஸ்டமர்களை கவரும் முயற்சியாக இவ்வாறான ஸ்பெஷல் எடிசன்கள், லிமிடெட் எடிசன்களை மெர்சிடிஸ் நிறுவனம் அவ்வப்போது உலகளவில் அறிமுகம் செய்வது வழக்கம்.
ஆனால், இந்த புதிய ஜி63 கலெக்டர்ஸ் எடிசன் ஆனது முழுக்க முழுக்க இந்தியர்களுக்கும், இந்திய கால சூழலுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வாகனமாக இதை மெர்சிடிஸ் நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது. பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய வாகனம் என்பதால், இதனை வாங்கும் கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
இதற்காக, மிட் க்ரீன் மக்னோ, ரெட் மக்னோ என இரு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களை மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வாகனங்களுக்கு மட்டுமே பொருத்தப்படக்கூடிய 22-இன்ச் அலாய் சக்கரங்கள் கோல்டு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. வாகனத்திற்கு உள்ளே இருக்கைகள் மற்றும் கதவுகள் மனுஃபேக்தர் கேடலனா பழுப்பு மற்றும் கருப்பு நப்பா லெதரால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, டேஸ்போர்டு ஆனது ஒபன்-போர் நேச்சுரல் வால்நட் வுட் ட்ரிம்மில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடி ரூபாயில் விலை கொண்டதாக இருப்பினும், மெர்சிடிஸ் ஜி-வேகன் வாகனத்தை இந்தியாவில் சில பேர் அதிகமாக வாங்குகின்றனர். குறிப்பாக, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்திற்கும் இந்தியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. இத்தகைய வாகனத்தில் புதியதாக லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் இந்த வாகனத்திற்கான கிரேஸ் இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








