8 நாளில் உலகையே சுற்றி வந்த இவி கார்! 5 நிமிஷத்துலேயே சார்ஜ் ஏறிடும்!

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி எக்ஸ் எக்ஸ் கார் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தில் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த கார் 24 மணி நேரத்தில் 5479 கி.மீ பயணித்துள்ளது. வெறும் 8 நாளுக்கும் குறைவான நேரத்தில் உலகையே சுற்றி வரும் அளவிற்கு பயணித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகளவில் ஆட்டோமொபைல் துறை வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களில் நம்பதன்மை, நீண்ட உழைப்பு, அதிக ரேஞ்ச் என பல்வேறு அம்சங்கள் கொண்ட வாகனங்களை தேடி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் மெர்சிடீஸ் நிறுவனம் தனது ஏஎம்ஜி ஜிடி எக்ஸ் எக்ஸ் என்ற காரை வைத்து உலக சாதனையை படைத்துள்ளது.

Mercedes AMG GT XX

இந்த கார் இத்தாலியில் உள்ள நார்டோ சோதனை டிராக்கில் ஓட்டி சோதனை செய்யப்பட்டது. இந்த கார் 24 மணி நேரத்தில் 5479 கி.மீ பயணித்து உலக சாதனை படைத்துள்ளது. இதை மெர்சிடீஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது இதற்கு முன்னர் சாதனை படைத்த கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதற்கு முன் எக்ஸ்பெங் பி7 கா் 3961 கி.மீ தூரமும், ஸியோமி ஒய்யூ7 மேக்ஸ் கார் 3945 கி.மீ தூரமும், மெர்சிடீஸ் சிஎல்ஏ கார் 3718 கி.மீ தூரமும் பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கார் 8 நாள் சோதனை திட்டத்திற்கும் உட்படுப்பட்டது. இந்த கார் 8 நாளில் மொத்தம் 40,075 கி.மீ பயணத்திருந்தது. இதற்கு இந்த கார் சுமார் 181.24 மணி நேரத்தை எடுத்து கொண்டுள்ளது. இந்த தூரம் உலகத்தை சுற்றி வரும் தூரத்திற்கு இணையாக இருக்கிறது. இது போக இந்த சோதனையில் உள்ளம் 25 சாதனைகளை இந்த கார் முறியடித்துள்ளது.

Mercedes AMG GT XX

இந்த மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி எக்ஸ் எக்ஸ் காரை பொருத்தவரை 114kWh என்எம்சி பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரி தான் ஏஎம்ஜி ஒன் ஹைப்பர் கார் மற்றும் எஃப் 1 கார்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் 3 விதமான மோட்டார்களை பயன்படுத்துகிறது. இதில் பின்பக்க ஆக்ஸிலில் 2 மோட்டார்களும், முன்பக்க மோட்டாரில் 1 ஆக்ஸிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 மோட்டாரும் செயல்படும்.

இந்த மோட்டார்கள் மூலம் மொத்தம் 1360 எச்பி பவரை வெளிப்படுத்த முடியும். இந்த கார் மொத்தம் 360 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காருக்கு சார்ஜ் ஏற்ற 850kW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சார்ஜ் ஏற்றினால் வெறும் 5 நிமிடம் சார்ஜ் போட்டாலே 400 கி.மீ ரேஞ்ச் தரும் வகையில் பேட்டரி சார்ஜ் ஏறிவிடும்.

Mercedes AMG GT XX

இந்த உலக சாதனை நிகழ்வில் 17 தொழிற்முறை டிரைவர்கள் பங்கேற்றதனர். இதில் மெர்சிடீஸ் ஏஎம்ஜி எஃப் 1 டிரைவர் ஜார்ஜ் ரஸ்ஸல் என்பவரும் உள்ளார். இந்த வாகனம் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்காக மட்டுமே நிறுத்தப்பட்டது. மற்ற நேரம் முழுவதுமாக ஓட்டப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மெர்சிடீஸ் நிறுவனத்தின் கான்செப்ட் கார் மட்டுமல்ல, ஏஎம்ஜி பிராண்டில் முதல் தயாரிப்பு நிலையில் உள்ள எலெக்ட்ரிக் கூப்பர் கார் ஆகும். இதன் மூலம் எதிர்காலத்தில் வேகம், பவர், என முழு எலெக்ட்ரிக் காரில் மக்கள் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் சாத்தியப்படுத்தப்படும் என தெளிவாக தெரிகிறது. இந்த கார் இவி வாகன உலகில் கனவு காராக இருகு்கிறது. இது சாதாரண ஸ்போர்ட்ஸ் காரையும் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 7:00 [IST]
English summary
Mercedes amg gt xx ev world record 24 hour distance
மேலும்... #mercedes benz
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X