ஜிஎஸ்டியை குறைச்சது எப்படி வேலை செய்யுது பாருங்க... திரும்பும் பக்கம் எல்லாம் இனி பென்ஸ் கார் தான்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து கார்களின் விலை குறைப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இதன்படி, மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலைகள் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து பல இலட்ச ரூபாய்கள் விலை குறைய உள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) திட்டத்தை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால், நாட்டில் பல பொருட்களின் விலைகள் குறையும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், கார்கள் மற்றும் பைக்குகளின் விலைகளும் குறைய உள்ளன.

mercedes-benz announced cars price cut

செப்.22ஆம் முதல் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வர நிலையில், அதன்பின் தங்களது கார்களின் விலைகள் எந்த அளவிற்கு குறைக்கப்பட உள்ளன என்பதை ஒவ்வொரு கார் நிறுவனங்களாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலைகளை எந்த அளவிற்கு குறைக்க உள்ளது என்பதை அறிவித்துள்ளது.

உலகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றதாக விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு தற்சமயம் 50% வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த 50 சதவீதத்தில் 28% ஜிஎஸ்டியும், 22% செஸ் (Cess) வரியுமாக வசூலிக்கப்படுகிறது. இதில், 28% ஜிஎஸ்டி ஆனது புதிய ஜிஎஸ்டி 2.0-இன் படி 18% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

mercedes-benz announced cars price cut

இதனால், 18% ஜிஎஸ்டி மற்றும் 22% செஸ் வரி என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் 40% வரி செலுத்தினால் போதும். இவ்வாறு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி குறைந்துள்ளதால், இது நேரடியாக மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலைகளை குறைத்துள்ளன. மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களை பொறுத்து ரூ.2.6 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரையில் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதிகப்பட்சமாக சுமார் ரூ.11 லட்சம் விலை குறைக்கப்பட்டு இருக்கும் பென்ஸ் கார் என்று பார்த்தால், அது எஸ்-கிளாஸ் (S-Class) ஆகும். இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் விலையுயர்ந்த செடான் ரக காரான எஸ்-கிளாஸ் ஆனது 450 4மேட்டிக் என்கிற வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எஸ்-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்சமயம் ரூ.1.99 கோடியாக உள்ளது.

mercedes-benz announced cars price cut

இது செப்.22க்கு பிறகு ரூ.11 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.1.88 கோடியாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கு அடுத்து அதிக விலை குறைப்பை பெற்றிருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார், ஜிஎல்எஸ் (GLS) ஆகும். 450டி ஏஎம்ஜி லைன் என்கிற வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரையில் குறைக்கப்பட்டு ரூ.1.44 கோடியாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

தற்சமயம் ஜிஎல்எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.34 கோடியாக உள்ளது. மெர்சிடிஸ் ஜி.எல்.இ (GLE) காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8 லட்சம் வரையிலும், இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் காரின் விலை ரூ.6 லட்சம் வரையிலும் குறைக்கப்பட உள்ளன. இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான காரான ஏ-கிளாஸ் (A-Class) காரின் விலை ரூ.2.6 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.45.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்கிறது. ஆனால், தற்போது விலை குறைப்பு அறிவிப்பானது ஏழு கார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆதலால், வரும் நாட்களில் மற்ற பென்ஸ் கார்களின் விலை குறைப்பு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2025, 16:25 [IST]
English summary
Mercedes benz announced price cut for its luxury cars due to gst 2 point zero
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X