ரூ.34 லட்சம் வழக்கத்தை விட குறைவாக... பென்ஸ் காரில் எலக்ட்ரிக் காரை வாங்கும் கனவை நிஜமாக்க நேரம் வந்தாச்சு!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் இ.க்யூ.எஸ் (EQS) என்கிற எலக்ட்ரிக் காரில் (Electric Car) புதியதாக செலெபிரேஷன் எடிசன் (Celebration Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.3 கோடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் லக்சரி செடான் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம். இந்தியாவில் லக்சரி கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம், நம் இந்தியர்கள் அந்த அளவிற்கு மெர்சிடிஸ் தயாரிப்புகளை நம்புவதினால் ஆகும்.
இதற்கு இணையாக, மெர்சிடிஸ் நிறுவனமும் அவ்வப்போது சலுகைகளை அறிவித்து கஸ்டமர்களை அதிகரித்து கொள்கிறது. அதேநேரம், தனக்கென தனித்துவமான கார்களை வைத்திருக்க விரும்புபவர்களையும் இவ்வாறான இக்யூஎஸ் செலெபிரேஷன் எடிசன் மூலமாக மெர்சிடிஸ் கவர முயற்சிக்கிறது. இதனை ஏன் தனித்துவமான இக்யூஎஸ் கார் என சொல்கிறோம் என்றால், வெறும் 50 செலெபிரேஷன் எடிசன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.

ஆதலால், மற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரில் இருந்து மாறுப்பட்ட இக்யூஎஸ் காரை வாங்க விரும்புபவர்களுக்கு புதிய செலெபிரேஷன் எடிசன் ஏற்றதாக இருக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.37 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இவ்வாறு காரில் ஸ்பெஷல் எடிசன் கொண்டுவருவதாக இருந்தால், வழக்கத்தை விட அதிக விலையில் கொண்டுவந்து பணக்காரர்களை டார்க்கெட் செய்யவே கார் நிறுவனங்கள் முயற்சிப்பது வழக்கம்.
ஆனால், மெர்சிடிஸ் நிறுவனம் வழக்கமான இக்யூஎஸ் காரை விட குறைவான விலையில் புதிய செலெபிரேஷன் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரின் மற்றொரு வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.71 கோடியாகும். இதனை காட்டிலும் குறைவான விலையில் கொண்டுவரப்பட்டதற்கு ஏற்ப புதிய செலெபிரேஷன் வேரியண்ட்டின் தோற்றத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இருப்பினும், சட்டெரென பார்க்கும்போது இக்யூஎஸ் 580 வேரியண்ட்டிற்கும், புதிய செலெபிரேஷன் வேரியண்ட்டிற்கும் இடையே தோற்றத்தில் வித்தியாசம் தெரியாது. புதிய இக்யூஎஸ் செலெபிரேஷன் வேரியண்ட் 'அல்பைன் கிரே' (Alpine Grey) என்கிற நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பளபளப்பான மெட்டாலிக் ஃபினிஷிங்கில் இல்லாமல், மேட் ஃபினிஷிங்கில் இந்த செலெபிரேஷன் வேரியண்ட் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரே நிறத்தில் இக்யூஎஸ் காரின் மற்றொரு வேரியண்ட்டை வாங்க முடியாது; செலெபிரேஷன் வேரியண்ட்டை மட்டுமே வாங்க முடியும். இந்த புதிய நிறத்துடன் சேர்த்து, 20-இன்ச் ஏஎம்ஜி 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர்த்து, காரின் தொழிற்நுட்ப அம்சங்களிலும், மெக்கானிக்கல் பாகங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.

ட்யூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப் உடன் உருவாக்கப்படும் மெர்சிடிஸ் இக்யூஎஸ் எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 523 பிஎச்பி மற்றும் 855 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் 107.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரி ஆனது ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 857கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் காரை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்கள் செலெபிரேஷன் எடிசனை வாங்கலாம். குறைந்த விலையில் இக்யூஎஸ் காரை அறிமுகம் செய்யும் முயற்சியாக இந்த ஸ்பெஷல் எடிசனை மெர்சிடிஸ்-பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெறும் 50 செலெபிரேஷன் எடிசன்களை மட்டுமே விற்பனை செய்ய மெர்சிடிஸ்-பென்ஸ் திட்டமிட்டுள்ளதால், விரைவாக முந்துவது நல்லது.


Click it and Unblock the Notifications









