இந்தியா ஏழை நாடுனு யாரு சொன்னது.. பழய ரெக்கார்டையே உடைக்கிற மாதிரி பென்ஸ் கார்கள் செம்ம ஜோரா சோல்ஸாகியிருக்கு!
இந்தியா பெரும் பணக்கார நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுகின்ற மாதிரியான ஓர் நிகழ்வு நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. வேறு ஒன்றுமில்லைங்க, இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பர கார்களின் விற்பனை புதிய வளர்ச்சியை சென்ற நிதியாண்டில் பெற்றிருக்கின்றது. மிகவும் காஸ்ட்லியான விலைக் கொண்ட கார்களை மட்டுமே விற்பனைச் செய்யக் கூடிய ஓர் பிராண்டாக மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் புதிய கார் விற்பனையில் பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
பழைய ரெக்கார்டுகளை உடைத்தெறியும் வகையிலேயே பென்ஸ் கார்கள் சென்ற நிதியாண்டில் விற்பனையாகி இருக்கின்றன. அது மொத்தமாக 2024-25 நிதியாண்டில் 18 ஆயிரத்து 928 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் அதிக விற்பனை ஆகும்.

குறிப்பாக பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர அம்சங்கள் நிரம்பிய எலெக்ட்ரிக் கார்களுக்கும் டிமாண்ட் பன்மடங்காக சென்ற நிதியாண்டில் கிடைத்திருக்கின்றது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 7 சதவீதம் மின்சார கார்களே ஆகும். அதேநேரத்தில், மின்சார கார்கள் 2023-24 நிதியாண்டைக் காட்டிலும் 2024-25 நிதியாண்டில் 51 சதவீதம் விற்பனையாகி இருக்கின்றன.
குறிப்பாக, எஸ் கிளாஸ் (S-Class), மெர்சிடிஸ் மேபேக் நைட் சீரிஸ் (Mercedes-Maybach Night Series), இக்யூ டெக்னாலஜிக் கொண்ட ஜி 580 (G 580 with EQ Technology), இக்யூஎஸ் (EQS SUV) மற்றும் ஏஎம்ஜி ஜி 63 (AMG G 63) ஆகிய மாடல்களுக்கும் இரட்டிப்பான வரவேற்பு நாட்டில் கிடைத்திருக்கின்றது.

இத்தனைக்கும் இவை அனைத்தும் நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களாக காட்சியளிக்கின்றன. இருப்பினும், இவை மிக சிறப்பாக இந்திய நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன. இதுவே பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து, இந்தியா ஏழை நாடு அல்ல என்று சொல்லவும் வைத்து உள்ளது.
இதுமட்டுமல்ல, நிறுவனத்தின் சி கிளாஸ் (C-Class), இ கிளாஸ் எல்டபிள்யூ (E-Class LWB), ஜிஎல்சி (GLC) மற்றும் ஜிஎல்இ (GLE) ஆகிய கார் மாடல்களும் மிக மிக அமோகமாக விற்பனையாகி இருக்கின்றன. முன்னதாக பார்த்த கார் மாடல்களைக் காட்டிலும் இவையே இந்தியாவில் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.
இதன் வாயிலாக இந்தியர்கள் மத்தியில் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது. இவை எல்லாம் இருக்கட்டும் பென்ஸ் நிறுவனத்தின் நம்பர் 1 கார் மாடல் எது என நீங்கள் கேட்கலாம்.
எல்டபிள்யூபி இ-கிளாஸ் இதுவே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த ஆடம்பர கார் மாடல் ரூ. 78.5 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ200 (E200), இ220டி (E220d) மற்றும் இ450 மேட்டிக் (E450 4MATIC) என மூன்று விதமான தேர்வுகளில் இதையே மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
197 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட 2.0 லிட்டர், 4 சிலிண்டர், மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் மோட்டார், 381 பிஎஸ் திறனை உருவாக்கும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் மோட்டார் மற்றும் 200 பிஎஸ் ஆற்றலும் உருவாக்கும் வசதிக் கொண்ட 2.0 லிட்டர், 4 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் டீசல் மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் என்னதான் ஆடம்பர கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகினாலும், இப்போதும் ஒரு வேளை சாப்பாட்டிற்கு அல்லல்படும் நபர்களும் இருக்கதான் செய்கின்றனர். இவர்கள் இருக்கும் இந்திய நாட்டிலேயே காருக்காக கோடிகளை தண்ணீர்போல செலவழிக்கும் நபர்களும் இருக்கின்றார்கள். இதுவே பலருக்கும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








