ஜிஎஸ்டி குறைச்சது எது வரைக்கும் வந்திருக்கு பாருங்க... மத்திய அரசால் எல்லாரும் பென்ஸ் கார் வாங்க போறோம்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் (E-Class LWB) ஆகும். லாங்-வீல்பேஸ் என்பது காரின் அதிகமான நீளத்தை குறிக்கிறது. அதாவது, நன்கு நீளமான பென்ஸ் இ-கிளாஸ் காராக இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த காரின் விலைகளை பெரிய அளவில் மெர்சிடிஸ் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது.

மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி 2.0 (GST 2.)-ஐ அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 4 விதமான நிலைகளில் பொருட்களுக்கான சரக்கு & சேவை வரிகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 2 நிலைகளாக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

mercedes-benz reduced e-class

இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வெகுவாக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி-யும் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, கார்கள் & 2-வீலர்களின் விலைகள் குறையும் சூழல் உருவாகி உள்ளது. அந்த வகையில்தான், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை சுமார் ரூ.6 லட்சம் வரையில் குறைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆனது மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இ200, இ220டி மற்றும் இ450 4மேட்டிக் ஏஎம்ஜி லைன் என்பன அந்த 3 வேரியண்ட்கள் ஆகும். இவை மூன்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.78.5 லட்சம், ரூ.80.5 லட்சம் மற்றும் ரூ.91.7 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

mercedes-benz reduced e-class

இந்த வேரியண்ட்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த விலைகளை காட்டிலும் இவை ரூ.6 லட்சம் வரையில் குறைவாகும். ஜிஎஸ்டி 2.0 திட்டத்தினால் லக்சரி கார்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை அடுத்து இந்த விலை குறைப்பு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்தியாவில் இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் காரை கடந்த 2024ஆம் ஆண்டில் சரியாக இதே நேரத்தில்தான் மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இந்த வகையில் பார்த்தால், இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த காருக்கு புதியதாக 'வெர்டே சில்வர்' (Verde Silver) என்கிற கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், சிறப்பாக விற்பனையாகும் பென்ஸ் கார்களுள் இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் ஒன்றாகும்.

mercedes-benz reduced e-class

எந்த அளவிற்கு அதிகம் என்றால், இதுவரையில் சுமார் 62 ஆயிரத்திற்கும் அதிகமான மெர்சிடிஸ் இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2024 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட 6ஆம் தலைமுறை இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் கார் இவ்வாறு மக்கள் பலரால் விரும்பி வாங்கப்படும் காராக இருப்பதாலேயே 'ICOTY 2024 லக்சரி செடான் ஆஃப் தி இயர்' விருது கடந்த ஆண்டு இறுதியில் அளிக்கப்பட்டது.

இந்த பென்ஸ் காரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஏஐ தொழிற்நுட்பத்துடன் 3ஆம் தலைமுறை எம்பக்ஸ் (MBUX) சூப்பர்ஸ்க்ரீன், வீடியோ அழைப்புகளுக்காக இன்-கார் செல்ஃபி கேமரா, டோல்பி அட்மஸ் உடன் பர்ம்ஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 36-டிகிரியில் தேவைக்கேற்ப மடக்கிக் கொள்ளக்கூடிய பின் வரிசை இருக்கைகள் மற்றும் 8 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் காரின் விலையை தற்போது பெரிய அளவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. ஏற்கனவே மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் காரின் விலையை சுமார் ரூ.6 லட்சம் வரையில் குறைத்துக் கொண்டிருப்பதன் மூலமாக இந்த காரின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2025, 11:57 [IST]
English summary
Mercedes benz reduced e class lwb car price in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X