மிடில்-கிளாஸ் மக்கள் பென்ஸ் கார் வாங்குவத இனி நெனைச்சு கூட பார்க்க முடியாது! இதுதான் நடக்க கூடாதுனு நெனைச்சோம்

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவின் முன்னணி லக்சரி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் விலை கொண்ட சொகுசு கார்களை ஆயிரக்கணக்கில் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த அளவிற்கு, இந்தியாவில் பென்ஸ் கார்களை கொண்டில்லாத தொழிலதிபர்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மற்ற கார் நிறுவனங்களை போன்று கார்களின் விலைகளை அவ்வப்போது அதிகரிப்பதையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் மறப்பது இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வாப்போது கார்களின் விலைகளை மெர்சிடிஸ் நிறுவனம் அதிகரித்து விடுகிறது.

அந்த வகையில் விரைவில் சில மெர்சிடிஸ் கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன. வருகிற ஜூன் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ள மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த புதிய விலை அதிகரிப்பின்படி, மெர்சிடிஸ் கார்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.12.2 லட்சம் வரையில் உயர்த்தப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

mercedes-benz revise car prices

கார்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவும், போக்குவரத்து செலவுகளும் கார் நிறுவனங்களை விலை உயர்த்த வைக்கின்றன. இதனால்தான், ஒவ்வொரு வருடத்திலும் ஒன்றுக்கு இரண்டு முறை கார்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றன. உலகின் பழமையான கார் நிறுவனமாக இருப்பினும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் இதில் விதிவிலக்கு அல்ல. ஆனால், விரைவில் மெர்சிடிஸ் நிறுவனம் கார்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இவை மட்டும் காரணமல்ல.

யூரோவை ரூபாயாக மாற்றும்போது ஏற்படும் தேய்மான செலவீனம் கடந்த 4 மாதங்களில் 10% அதிகரித்து இருப்பதும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இந்த விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இதனால், ஐரோப்பாவில் இருந்து ஏதேனும் பொருட்களை கொண்டுவரும்போது அவற்றிற்கான மதிப்பு அதிகரிக்கிறது. மெர்சிடிஸ் நிறுவனம் பெரும்பாலான கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்துவிடுகிறது.

mercedes-benz revise car prices

ஆனால், சில கார்களை ஐரோப்பாவில் இருந்து பாகங்களாக கொண்டுவந்து இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. சில பென்ஸ் கார்கள் முற்றிலுமாக வெளிநாட்டில் இருந்து முழு காராக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களுக்கும் சில பாகங்களை வெளிநாடுகளில் இருந்து மெர்சிடிஸ் நிறுவனம் இறக்குமதி செய்கிறது.

இதனால்தான், ஐரோப்பாவில் இருந்து கொண்டுவரப்படும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படும் கார்களின் விலைகளை வருகிற ஜூன் மாதத்தில் இருந்து மெர்சிடிஸ் நிறுவனம் அதிகரிக்க உள்ளது. முடிந்தவரையில் விலை உயர்வை தவிர்க்க முயன்றதாகவும், இருப்பினும் அதனையும் தாண்டி சில கார்களின் விலைகள் ஜூன் 1 முதல் அதிகரிக்கப்படுவதாகவும் மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவை எந்தெந்த பென்ஸ் கார்கள் என்பதை இனி வரிசையாக பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் (C-Class): மெர்சிடிஸ் நிறுவனத்தின் தாழ்வான உடலமைப்பை கொண்ட சி-கிளாஸ் காரின் விலை குறைவான சி200 வேரியண்ட்டின் விலை மட்டுமே அதிகரிக்கப்பட உள்ளது. மற்ற இரு வேரியண்ட்களான சி220டி மற்றும் சி300-இன் விலைகளில் எந்த அதிகரிப்பும் கிடையாது. சி-கிளாஸ் சி200 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.59.4 லட்சமாக இருக்கும் நிலையில், விரைவில் இது ரூ.90 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு ரூ.60.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி (GLC): மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அளவில் பெரியதான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக காரான ஜிஎல்சி இந்தியாவில் 300 மற்றும் 220டி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பெட்ரோல் வேரியண்ட்டான '300'-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.76.8 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.78.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. மற்றப்படி, 220டி என்கிற டீசல் வேரியண்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (E-Class): சி-கிளாஸ் செடான் காரை போன்று, இ-கிளாஸ் செடான் காரின் விலை குறைவான இ200 வேரியண்ட்டின் விலை மட்டும் ரூ.2 லட்சம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது ரூ.79.5 லட்சமாக இருக்கும் இ-கிளாஸ் இ200 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.81.5 லட்சமாக உயர உள்ளது. இ200 வேரியண்ட் மட்டுமின்றி, இ220டி என்கிற டீசல் வேரியண்ட்டிலும், இ450 என்கிற பெட்ரோல் வேரியண்ட்டிலும் இ-கிளாஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ (GLE): இந்த விலையுயர்ந்த எஸ்யூவி காரிலும் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான '300டி ஏஎம்ஜி லைன்'-இன் எக்ஸ்-ஷோரூம் விலையை மட்டுமே மெர்சிடிஸ் நிறுவனம் வருகிற ஜூன் முதல் அதிகரிக்க உள்ளது. தற்சமயம் ரூ.99 லட்சமாக இருக்கும் இந்த டீசல் காரின் விலை, ஜூன் 1 முதல் ரூ.2.5 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.1 கோடியே 1.5 லட்சமாக இருக்கும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.எஸ் (EQS): இந்தியாவில் செடான் மற்றும் எஸ்யூவி என இரு விதமான உடலமைப்புகளிலும் விற்பனை செய்யப்படும் பென்ஸ் கார், இக்யூஎஸ் ஆகும். ஜூன் 1 முதல் இக்யூஎஸ் எஸ்யூவி காரின் விலை மட்டுமே அதிகரிக்கப்பட உள்ளது. இக்யூஎஸ் எஸ்யூவி காரிலும் '450' என்கிற எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விலை மட்டுமே ரூ.3 லட்சம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்சமயம் ரூ.1.28 கோடியாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை ஜூன் முதல் ரூ.1.37 கோடி ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (GLS): இந்தியாவில் மிக பிரபலமான பென்ஸ் காரான ஜி.எல்.எஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை மட்டுமே இந்த முறை அதிகரிக்கப்பட உள்ளது. ஜி.எல்.எஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்டான '450'-இன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.34 கோடியாக இருக்கும் நிலையில், வருகிற ஜூன் முதல் ரூ.3.1 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.1.37 கோடியாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் (Mercedes-Maybach S-Class): வருகிற ஜூன் முதல் விலை அதிகரிக்கப்பட உள்ள ஒரேயொரு மெர்சிடிஸ்-மேபக் கார், எஸ்-கிளாஸ் ஆகும். இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே விலையுயர்ந்த செடான் ரக காரான மேபக் எஸ்-கிளாஸின் விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டான எஸ்680-இன் விலை மட்டுமே இந்த முறை அதிகரிக்கப்பட உள்ளது. அளவில் பெரியதான 6 லிட்டர் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.12.2 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.3.60 கோடியாக நிர்ணயிக்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் நிறுவனம் இந்த முறை கார்களின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களின் விலைகளை தான் முக்கியமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக நீண்ட காலமாக அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படாமல் இருந்தது ஆகும். இதைவிட பெரிய அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், ஜூன் மாதம் முதல் கொண்டுவரப்பட உள்ள இந்த விலை அதிகரிப்பானது இந்த வருடத்தில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் முதல் விலை அதிகரிப்பாகும். 2வது விலை அதிகரிப்பானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் கார்களின் விலைகளில் 1.5% வரையில் கொண்டுவரப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2025, 23:59 [IST]
English summary
Mercedes benz revise car prices from june 1 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+