9 நாளில் 2500 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! காஸ்ட்லி இருந்தாலும் செம சேஸ்ல்!

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது. கடந்தமாதம் மட்டும் இந்நிறுவனத்தின் கார்கள் 36 சதவீதம் விற்பனைய அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றத்திற்கு பிறகு இந்த வளர்ச்சி நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காலணாம் வாருங்கள்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி மாற்றம் அமலுக்கு வந்தது. இதன்படி வாகனங்களின் விலை எல்லாம் கணிசமாக குறைந்தது. வழக்கமாக நவராத்திரி காலத்தில் விற்பனை அதிகமாகும் நிலையில் இந்தாண்டு விற்பனையை மேலும் அதிகரிக்கும் கவயில் ஜிஎஸ்டி வரி மாற்றம் அமலுக்கு வந்தது.

Mercedes Benz Sales Sep 2025

இதன் விளைவாக நவராத்திரி விழாவான 9 நாளில் மட்டும் மொத்தாம் 2500 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது இந்தியாவிலேயே இந்நிறுவனம் செய்த அதிக விற்பனையாகும். நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம மொத்தம் 9357 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 5119 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த அதிக விற்பவனவனைக்கு மக்கள் மத்தியில் சொகுசு கார்கள் குறித்த தேவை அதிகமாகியுள்ளது மிக மு்கிமான காரணமாக பார்க்கப்படுகிறது. சொகுசு கார்களிலேயே எலெக்ட்ரிக் கார்களின் விலையும் அதிகமாகியுள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் மட்டும் மொத்த விற்பனையில் 8 சதவீதம் விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.

Mercedes Benz Sales Sep 2025

மெர்சிடீஸ் நிறுவனத்தின் கார்களிலேயே டாப் வேரியன்ட் கார்களின் விற்பனை 25 சதவீதம் இருக்கிறது. இது கடந்தாண்டு விற்பனையை ஒப்பிடும் போது 12 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதில் ஜிஎல்எஸ், எஸ்-கிளாஸ், மெர்சிடீஸ் மேபேக், ஏஎம்ஜி ஜி63 உள்ளிட்ட கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

இதில் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜி63 காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. இந்த கார் தான் அதிக விற்பனையை பெற்றுள்ளது. அதே நேரம் இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாக உள்ளது. இன்று இந்த காரை வாங்க புக் செய்தால் 6 மாதத்திற்கு பிறகு தான் டெலிவரி கிடைக்கும். புக்கிங் குவிந்துள்ளதால் இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. படிப்படியாக தயாரிப்பு அதிகமாகி வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது.

Mercedes Benz Sales Sep 2025

இது மட்டுமல்ல லாங் வீல் பேஸ் இ-கிளாஸ், ஜிஎல்சி, மற்றும் ஜிஎல்இ ஆகிய கார்களின் விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் அதிகமாகியுள்ளது. இந்த கார்கள் எல்லாம் அந்நிறுவனத்தின் கோர் செக்மெண்ட் கார்களாக உள்ளன. இதில் லாங் வீல் பேஸ் இ-கிளாஸ் காரின் விற்பனை சிறப்பாக இருந்துள்ளது . கடந்த காலாண்டில் விற்பனை 47 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதே நேரம் எண்ட்ரி லெவல் செக்மெண்ட் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஏகிளாஸ் செடான் மற்றும் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்கள் குறைவான விலையில் நல்ல அம்சங்களும் விற்பனையாகி வந்தாலும் மார்கெட்டில் போதுமான வரவேற்பில்லை. குறைந்த விலை கார் என்ற பெயரே இந்தகாரின் விற்பனையை கணிசமாக குறைத்துள்ளது.

Mercedes Benz Sales Sep 2025

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது 10 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை தான் விற்பனை செய்து வருகிறது. இதில் இக்யூஎஸ் என்ற எஸ்யூவி கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பவனையாகியுள்ளது. டாப் எண்ட் வாகனமான ஜி580 எடிசன் இக்யூ டெக்னாலஜியுடன் இருக்கும் கார் இந்தாண்டு விற்று தீர்ந்துவடிட்டது. அடுத்த டெலிவரிக்கான புக்கிங் தான் தற்போது நடந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடீஸ் நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக சொகுசு வாகனங்களை விற்பவனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 9 நாளில் 2500 கார்களை விற்பனை செய்தது சாதனை தான். இந்நிறுவனம் தொடர்ந்து விற்பனையில் வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 7, 2025, 8:15 [IST]
English summary
Mercedes benz sales sep 2025 records 36 percent growth
மேலும்... #mercedes benz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X