இந்த வாகனத்திற்கு முன்னாடி உல்லாச கப்பலே தோத்து போகும்.. 65 இன்ச் 4கே டிவியோட இந்த வாகனம் வர போகுது!!!
பெரும் பணக்காரர்களின் ஆடம்பர பங்களாக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் வாகனத்தை முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனத்திற்கு முன்னால் சொகுசு கப்பலே தோற்று போகக்கூடும். அந்த அளவிற்கே தன்னுடைய புதுமுக வாகனத்தை உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz)-ஸே தயார் செய்திருக்கின்றது. விஷன் வி (Vision V) எனும் மினி வேன் வகை வாகனத்தையே அது தயார் செய்திருக்கின்றது. இது பார்க்க லிமோசைன் வகை வாகனத்தைப் போலவும் தெரிகின்றது. இந்த வாகனத்தையே அது தற்போது வெளியீடும் செய்து இருக்கின்றது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2025 ஷாங்காய் மோட்டார் ஷோ (2025 Shanghai Motor Show) வாயிலாகவே இந்த வாகனத்தை அது வெளியீடு செய்திருக்கின்றது. கான்செப்ட் (Concept) மாடலாகவே இதனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. விரைவிலேயே இதனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது அரங்கேறியிருக்கும் வெளியீட்டு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த வாகனத்தின் உற்பத்தி பணிகள் சீக்கிரமே தொடங்கப்பட இருப்பதாகவும், இதன் அறிமுகம் 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரங்கேறிவிடும் என்றும் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க பணக்காரர்கள் மற்றும் விவிஐபி போன்றோரை மனதில் கொண்டே இந்த மினி வேன் வகை வாகனத்தை பென்ஸ் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது வெளியாகி இருக்கும் படங்கள் உள்ளன. குறிப்பாக, வாகனத்தின் உட்பக்கத்தில் வேறு எந்த காரிலும் காணக்கிடைக்காத அம்சங்கள் பலவற்றை வழங்கி இருப்பதும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பாக, டிரைவர் மற்றும் பயணிகள் பகுதியை பிரிக்கின்ற மாதிரியான கண்ணாடியினாலான ஓர் தடுப்பு சுவர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல, 65 அங்குல 4கே திரை, 42 டால்ஃபி அட்மாஸ் ஸ்பீக்கர்கள், 7 புரஜெக்டர்கள் உள்ளிட்டவற்றை இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இதைமட்டுமல்ல கேம் விளையாடும் வசதி, பொழுதைப் போக்குவதற்கான பிற வசதிகளையும் இந்த வாகனத்தில் அது வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் 65 அங்குல திரையானது சினிமாவில் படம் பார்க்கின்றன மாதிரியான அனுபவத்தை வழங்கும். ஆகையால், தனியாக திரையரங்குகளுக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த காரின் உருவம் இருக்கும் அளவிற்கு ஏழு முதல் எட்டு பேர் கூட பயணிக்கலாம். ஆனால், இந்த வாகனத்தை வெறும் நான்கு பேர் மட்டுமே போகின்ற வகையில் இப்போது தயார் செய்திருக்கின்றது. டிரைவருடன் ஒரு பயணியும், பின் பக்கத்தில் இரண்டு பேரும் அமர்ந்து பயணிக்கின்ற மாதிரியான இருக்கை செட்-அப்பே வழங்கப்பட்டு இருக்கின்றது.
மிகவும் சௌகரியமான பயண அனுபவத்தை தன்னுடைய கஷ்டமர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இத்தகைய இருக்கை செட்-அப்பை விஷன் வி கான்செப்ட் மாடலில் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் ஆகும். ஆகையால், பயன்பாட்டில் பெரிய அளவில் இந்த காரில் செலவு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததுபோன்ற சிறப்பம்சங்களைத் தாங்கிய வாகனத்தையே உலக பணக்காரர்களைக் கவரும் நோக்கில் பென்ஸ் நிறுவனம் தற்போது தயார் செய்திருக்கின்றது. விரைவில் இதனை உலக சந்தையில் அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.


Click it and Unblock the Notifications









