பணக்காரங்க எல்லாம் கண்ணை மூடிட்டு இந்த காரை வாங்குறாங்க! விலை ரொம்ப ஜாஸ்தி!

மெர்சிடீஸ் பென்ஸ் ஜி கிளாஸ் கார் முக்கியமான கமைல் கல்லை எட்டியுள்ளது. இந்த கார் அதிக விலையில் விற்பனையானாலும் அதிக நபர்கள் இந்த காரை வாங்கியள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் இந்த காரை வாங்கியுள்ளனர். இந்த கார் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சொகுசு எஸ்யூவி கார்களை விற்பனை செய்யும் முக்கிய நிறுவனமாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் ஜிகிளாஸ் கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த கார் 6 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது.

Mercedes G Class

இந்த காரை அந்நிறுவனம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கிராஸ் பகுதியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. ிந்த செக்மெண்டில் எலெக்ட்ரிக் காரும் தற்போது விற்பனையாகி வருகிறது. அதன்படி ஜி 580 இக்யூ என்ற கார் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த காரின் அம்சங்களை காணலாம்.

இந்த ஜி கிளாஸ் கார் கடந்த 1979ம் ஆண்டு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 40 ஆண்டுகளாக இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பல்வேறு டிசைன் மற்றும் அம்சங்கள் மாற்றப்பறட்டுள்ளன. இதில் வட்ட வடிவ ஹெட்லைட், சதுர வடிவ பாடி, பின்பக்கம் பொருத்தப்பட்ட வீல், பொருத்தப்பட்ட வடிவமைப்பில் இந்த கார் முதலில் வடிவமைகப்பட்டது. இந்த டிசைன் மொழி இன்னும் தொடர்கிறது.

Mercedes G Class

இந்த காரில் மார்டனான் தொழிற்நுட்பங்கள் வந்தாலும் ரெட்ரோ லுக்கை தொடர்ந்து பின்பற்றி வருகிறது இந்த கார் மொத்தம் 6 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும். இந்த எலெக்ட்ரிக் காரில் மாசு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லுக்கில் கம்பஷன் இன்ஜின் கார் போலவே இருக்கிறது.

இந்த காரில் கஸ்டமைஸ்டு ஆப்ஷனை மெர்சிடீஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்த காரை வாங்கிய 90 சதவீத வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு கஸ்டமைஸ்டு ஆப்ஷனாக கூட வாங்க வாய்ப்புள்ளது. இந்த கார் 20,000 பெயிண்ட் ஆப்ஷன்களை கடந்த 2024ம் ஆண்டு வரை வழங்கியது.

Mercedes G Class

இந்த கார் ஜி-கிளாஸ் கார் ஆஃப் ரோடு அம்சங்களுடன் வருகிறது. இதற்காக ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் நிச்சயம் பணக்காரர்கள் மத்தியில் இந்த கார் பிரபலமாக இருக்கிறது. காசு பற்றி எல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிட்டு இந்த காரை வாங்கியுள்ளனர் என்றே சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பணக்காரர்கள் மட்டுமே இந்த காரை வாங்ககூடிய நிலையில் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்தகார் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 7:00 [IST]
English summary
Mercedes g class 6 lakh units produced since 1979 details
மேலும்... #mercedes benz #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X