3 செகண்ட் போதும்... என்ஜினை ஸ்டார்ட் செய்ததும் பறக்கலாம்! காரின் விலையை பார்த்தால்தான் மயக்கம் வருது!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அவ்வப்போது புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வாடிக்கையானதே. ஏனெனில், அந்த அளவிற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான சந்தையாக விளங்குகிறது. நம் நாட்டில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் முதலிடம் வகிக்கிறது. பொதுவாக, மெர்சிடிஸ் கார்கள் மூன்று விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ், ஏஎம்ஜி (AMG) மற்றும் மேபக் (Maybach) என்பன அவை ஆகும். இதில், மெர்சிடிஸ்-மேபக் கார்கள் மிகவும் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன. ஏஎம்ஜி மற்றும் மேபக் என இரண்டும் இணைந்த மெர்சிடிஸ்-மேபக் ஏஎம்ஜி கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் ஆகும். ஏஎம்ஜி கார்கள் என்றாலே அவை ஆற்றல்மிக்கவை மற்றும் செயல்திறன்மிக்கவை ஆகும். அதற்கு இணையாக விலையையும் அதிகமாக கொண்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களாக புதியதாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 (GT63) மற்றும் ஜிடி63 புரோ (GT63 Pro) கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

mercedes benz amg gt63

இதில், புதிய ஏஎம்ஜி ஜிடி63 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3 கோடியாகவும், ஜிடி63 புரோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.65 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பிரபலமான ஏஎம்ஜி ஜிடி63 கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் விற்பனையில் இருந்த முதலாம் தலைமுறை ஏஎம்ஜி ஜிடி63 கார்களின் விற்பனையை 2020ஆம் ஆண்டில் மெர்சிடிஸ் நிறுத்தியது.

அதன்பின் 5 வருடங்கள் கழித்து தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஏஎம்ஜி காரில் அதற்கேற்ப பல புதிய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய 2025 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 காரை புக் செய்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற 2025 அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து ஏஎம்ஜி ஜிடி63 புரோ காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் 2026ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 மற்றும் ஜிடி63 புரோ என இரு கார்களிலும் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. ஆனால், இந்த டர்போ என்ஜின் இந்த இரு கார்களிலும் வெவ்வேறு அளவுகளில் இயக்க ஆற்றலை வழங்குகிறது. அதாவது, ஜிடி63 காரில் அதிகப்பட்சமாக 585 எச்பி மற்றும் 800 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

அதுவே, ஜிடி63 புரோ காரில் இதே என்ஜின் அதிகப்பட்சமாக 612 எச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப, இந்த ஏஎம்ஜி கார்களின் செயல்படுதிறனும் காரை பொறுத்து வேறுப்படுகிறது. ஜிடி63 காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம்.

ஜிடி63 புரோ காரில் இதைவிட 0.1 வினாடி விரைவாக 3.1 வினாடிகளிலேயே மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிடலாம். இதற்கு, ஜிடி63 புரோ காரின் டயர்கள் உதவியாக இருக்கின்றன. ஜிடி63 புரோ காரில் மட்டும் பிரத்யேகமாக கப் 2ஆர் (Cup 2R) டயர்கள் பொருத்தப்படுகின்றன. சக்கரங்களுக்கான டயர்கள் மட்டுமின்றி, அட்வான்ஸ்டு கூலிங் சிஸ்டம்ஸ், பெரிய அளவிலான பிரேக்குகள் மற்றும் எடை குறைவான சக்கரங்கள் உள்ளிட்டவையும் ஜிடி63 புரோ காரில் மட்டும் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

ஜிடி63 மற்றும் ஜிடி63 புரோ என இரு கார்களும் அவற்றின் முந்தைய வெர்சன்களுடன் ஒப்பிடுகையில் அளவில் பெரியவைகளாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், அலுமினியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் கார்பன்-ஃபைபர் போன்ற உலோகங்களினால் குறைவான எடையில் இந்த புதிய ஏஎம்ஜி கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த புதிய ஏஎம்ஜி கார்களுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதுடன், இந்த கார்களை ரேஸ் டிராக்கில் அதிகப்பட்ச வேகத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பையும் வழங்குவதாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேகமாக கார் ஓட்ட விரும்புபவர்களை இவ்வாறான டெஸ்ட் டிரைவ் நிச்சயமாக கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 19:00 [IST]
English summary
Mercedes launches amg gt63 and gt63 pro in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+