விலை 4.20கோடி.. 2பேர் மட்டுமே போக கூடிய இந்த கார 3பேரால் மட்டுமே வாங்க முடியும்.. வீலோட அழகிற்கே குவிய போறாங்க

மெர்சிடிஸ் மேபேக் எஸ்எல் 680 மோனோகிராம் சீரிஸ் (Mercedes-Maybach SL 680 Monogram Series) சொகுசு கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் மேபேக் எஸ்எல் கார் மாடல் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 4.20 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்எல் 55 (Mercedes-AMG SL 55) கார் மாடலைக் காட்டிலும் ரூ. 1.50 கோடி அதிக விலையைக் கொண்டதாக இது காட்சியளிக்கின்றது.

இந்த காரை விட அதிக ஆடம்பர மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய ஓர் கார் மாடலே மெர்சிடிஸ் மேபேக் எஸ்எல் 680 மோனோகிராம் ஆகும். அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது இந்த தற்போது இந்த சொகுசு காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன.

Mercedes-maybach sl 680 launched

இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்ட இந்த காரை மூன்றே மூன்று பேரால் மட்டுமே இந்த காரை வாங்க முடியும். ஆமாங்க, இந்தியாவிற்காக வெறும் மூன்று யூனிட்டுகளை மட்டுமே ஒதுக்கி இருக்கின்றது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இதற்கே புக்கிங் பணிகளையும் அது தொடங்கி இருக்கின்றது. இது 2025 ஆம் ஆண்டிற்கானது மட்டுமே ஆகும்.

2026 ஆம் ஆண்டிலும் இதேபோல் சில யூனிட்டுகள் இந்தியாவிற்காக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் சில ஏஎம்ஜி எஸ்எல் 55 மாடலை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கின்றது. குறிப்பாக, டிசைன் வேலை இந்த காரை தழுவியே செய்யப்பட்டு உள்ளது.

Mercedes-maybach sl 680 full view

குறிப்பாக, எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் (பகல் நேரத்தில் ஒளிரும்) லைட் உள்ளிட்டவை மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்எல் 55 மாடலை பிரதிபலிக்கின்ற வகையிலேயே உள்ளது. ஆனால், பம்பர் மற்றும் கிரில் உள்ளிட்டவை மிகவும் தனித்துவமானவையாகக் காட்சியளிக்கின்றன. அவை மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.

இதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக குரோம் பூச்சு வேலை செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் ஹூட் பகுதியை தனித்துவமானதாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக கருப்பு நிறத்தால் அலங்கரித்து இருக்கின்றனர். இது அந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியான ஸ்போர்ட்டி லுக்கைச் சேர்க்கும் வகையில் உள்ளது.

Mercedes-maybach sl 680 launch pic

இதேபோல், மேபேக் லோகோவும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. வீல்களைப் பொருத்த வரை இந்த காரில் 21 அங்குல அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுவும் மிகவும் தனித்துவமான லுக்கைக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதன் ரியர் வியூ கண்ணாடிகளும் கருப்பு நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.

அதேவேளையில், டோர் கை பிடிகளில்கூட குரோம் பூச்சி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் உட்பக்கமும் மிகுந்த அழகானதாக உள்ளது. குறிப்பாக, தொழில்நுட்ப கருவிகளால் இந்த காரை மிகப் பெரிய அளவில் அலங்கரித்திருக்கின்றனர். 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, 11.9 அங்குல டச் ஸ்கிரீன் வசதிக் கொண்ட திரை, ஹெட்ஸ் அப் திரை உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.

வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பர்மெஸ்டர் சவுண்டு சிஸ்டம், டூயல் ஜோன் ஆட்டோ ஏசி சிஸ்டம், ஹீட்டட் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மேற்கூரை திறந்துக் கொண்டு டிராவல் செய்யும் போது குளிரால் கைகள் நடுங்கக் கூடாது என்பதற்காக இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதேவேளையில், மேற்கூரையை விரித்துப் பயணிக்கும்போது வியர்க்கக் கூடாது என்பதற்காக டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, ஹீட்டட் ஸ்டியரிங் வீல், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், கழுத்துப் பகுதிக்கான ஹீட்டர்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஏர் பேக், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டேஷ்கேம், ஆட்டோ பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

Take a Poll

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார் 585 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க்கை வெளியேற்றும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஆல் வீல் டிரைவ் வசதிக் கொண்ட கார் மாடல் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் மூன்றே மூன்று யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். ஆகையால், பணக்காரர்கள் மத்தியில் மிகப் பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் போட்டி போட்டு இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

FAQs
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட இதற்கு எவ்வளவு செகண்டு தேவைப்படும்?

0-100 வேகத்தை எட்ட மெர்சிடிஸ் மேபேக் எஸ்எல் 680 மோனோகிராம் சீரிஸ் காருக்கு வெறும் 4 செகண்டுகளே போதுமானது.

மெர்சிடிஸ் மேபேக் எஸ்எல் 680 மோனோகிராம் சீரிஸ் காரில் எத்தனை பேர் பயணிக்க முடியும்?

இருவரால் மட்டுமே இந்த காரில் பயணிக்க முடியும். ஜோடியாக உல்லாச பயணத்தை மேற்கொள்ளும் நோக்கிலேயே இதனை 2 சீட்டராக தயாரித்திருக்கின்றனர்.

இந்த காரின் டெலிவரி பணிகள் எப்போது நாட்டில் தொடங்கும்?

புக்கிங் பணிகள் இப்போது தொடங்கி இருந்தாலும், டெலிவரி பணிகள் 2026 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட இருக்கின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 23:48 [IST]
English summary
Mercedes maybach sl 680 monogram series launched in india priced at rs 4 20 crore
மேலும்... #mercedes benz #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X