ரூ. 9.99 லட்சத்திற்கு எம்ஜியின் அசத்தலான கார் அறிமுகம்.. சன்ரூஃபை விலை குறைவான தேர்விலேயே வழங்கியிருக்காங்க!!
எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக அஸ்டர் இருக்கின்றது. இந்த கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு புதிய மாற்றங்களை இந்த கார் மாடலில் எம்ஜி நிறுவனம் செய்திருக்கின்றது. அந்தவகையில், சற்றே விலை குறைவான தேர்விலேயே பனோரமிக் சன்ரூஃப் அம்சம் கிடைக்கின்ற மாதிரியான மாற்றத்தையும் எம்ஜி நிறுவனம் செய்திருக்கின்றது. இந்த காரில் வேறு என்னவெல்லாம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
எம்ஜி நிறுவனம் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் அஸ்டர் கார் மாடலுக்கு ரூ. 9.99 லட்சம் விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 18.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலைக் கொண்ட தேர்விலேயே மிக அதிக சிறப்பம்சங்களை நிறுவனம் வழங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மொத்தமாக ஆறு விதமான தேர்வுகளில் எம்ஜி அஸ்டர் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்பிரிண்ட் (Sprint), ஷைன் (Shine), செலக்ட் (Select), ஷார்ப் ப்ரோ (Sharp Pro) மற்றும் சேவி ப்ரோ (Savvy Pro) ஆகியவையே அவை ஆகும்.
மேலே சற்றே விலை குறைவான வேரியண்டும் சன்ரூஃப் அம்சத்தைப் பெற்றிருப்பதாக கூறியிருந்தோம். இந்த வேரியண்டில் ஷைன்-னிலேயே சன்ரூஃப் அம்சம் இம்முறை வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த தேர்விற்கு 12.50 லட்ச ரூபாயே நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. 2024 மாடல் அஸ்டர் மாடலின் ஷைன் வேரியண்டில் இந்த அம்சம் கிடைக்காது என்பது கிடைக்காது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுமட்டுமல்ல இந்த வேரியண்டில் வழங்கப்படும் ஸ்பீக்கர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. 4 ஸ்பீக்கர்களில் இருந்து ஆறு ஸ்பீக்கர்களாக அவை உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், சற்றே விலை குறைவான தேர்விலேயே அதிக சிறப்பம்சங்களை பெற வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஷைன் வேரியண்ட் சிறந்த தேர்வாக தற்போது அமைந்திருக்கின்றது.
இதுமட்டுமல்ல இந்த எஸ்யூவி காரில் பாதுகாப்பு அம்சங்களையும் சற்றே கூட்டி இருக்கின்றது எம்ஜி நிறுவனம். ஆமாங்க, குறிப்பிட்ட சில வேரியண்டுகளில் ஆறு ஏர் பேக்குகளை நிறுவனம் கட்டாயமாக்கி இருக்கின்றது. அத்துடன், பிரீமியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு லெதரால் காரின் உட்பக்கத்தை நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது.
இவற்றுடன் சேர்த்தே 10.1 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 7 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரையும் 2025 அஸ்டர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், பிரீமியம் டிராவல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஆட்டோ டிம்மிங் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பவர்டு இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் கார் இணைப்பு அம்சம் ஆகியவற்றையும் இந்த காரில் எம்ஜி நிறுவனம் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சமீப காலமாக சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே புதுப்பிக்கப்பட்ட அஸ்டர் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, எம்ஜி. குறிப்பாக, சற்றே விலை குறைவான தேர்விலும் சன்ரூஃப் அம்சத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








