200கிமீ-க்கு சார்ஜ் பயமே இல்ல! இந்த காரை வாங்கும்போது இந்த கலர் ஆப்ஷன் இருக்கானு கேட்டு வாங்குங்க

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக கோமெட் இவி பிளாக்ஸ்டோர்ம் எடிசன் (Comet EV Blackstorm Edition) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கோமெட் இவி எலக்ட்ரிக் கார் (Electric Car)-இன் புதிய ஸ்பெஷல் எடிசன் காராக இந்த பிளாக்ஸ்டோர்ம் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரின் முக்கியமான 5 அம்சங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

வெளிப்புற தோற்றம்: கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் வேரியண்ட்களுக்கும் புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனுக்கும் இடையேயான முக்கியமான வித்தியாசம், அதன் தோற்றம் ஆகும். பெயருக்கேற்ப புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசன் கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது கோமெட் இவி எலக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் உள்ளது.

mg comet ev blackstorm edition

புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனின் வெளிப்பக்கம் முழுவதுமாக கருப்பு நிறத்தில் இருப்பினும், ஆங்காங்கே தனியாக தெரியும் வகையில் சிவப்பு நிற ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் ஃபெண்டரில் பொருத்துவதற்கான பேட்ஜ், பொனெட்டில் சிவப்பு நிறத்தில் 'Morris Garage' (MG) எழுத்துகள், கருப்பு நிறத்தில் வீல் கவர்கள் மற்றும் டோர் டிகால்கள் உள்ளிட்டவற்றை கூடுதல் தொகையை செலுத்தி பெறலாம்.

உட்புற தோற்றம்: வெளிப்பக்கத்தை போல், காருக்கு உள்ளேயும் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கேபின் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, முன் இருக்கைகளின் தலையணைகளில் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ள காரின் பெயரான 'Blackstorm Edition' என்பது பார்ப்போரை கவர்ந்திழுக்கக் கூடியதாக உள்ளது.

கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டான எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் அடிப்படையில் புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து தொழிற்நுட்ப அம்சங்களையும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனிலும் பெறலாம். கூடுதலாக, சவுண்ட் சிஸ்டத்தில் 2 ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

mg comet ev blackstorm edition

பேட்டரி & ரேஞ்ச்: கோமெட் இவி பிளாக்ஸ்டோர்ம் எடிசனிலும் வழக்கமான 17.3kWh திறன் கொண்ட பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 42 எச்பி மற்றும் 110 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 230கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என எம்ஜி தெரிவிக்கிறது.

குத்தகை முறையில் பேட்டரி: புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனை பேட்டரி உடன் வாங்க முடியாது. பேட்டரி இல்லாமல், இந்த புதிய எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காருடன் வழங்கப்படும் பேட்டரியின் சார்ஜ் காலியான பின் அதனை கொடுத்து, வேறொரு சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். எவ்வளவு சார்ஜ் பயன்படுத்தியுள்ளோம் என்பதை பொறுத்து, கிமீ-க்கு ரூ.2.5 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி விளங்குகிறது. கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற கோமெட் இவி எலக்ட்ரிக் கார்களை போன்று புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிசனிலும் பேட்டரியை குத்தகை முறையில் வழங்க எம்ஜி திட்டமிட்டு இருப்பது நல்ல வியாபார யுக்தி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 8:00 [IST]
English summary
Mg comet ev blackstorm edition electric car 5 highlights
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+