இந்த குட்டியூண்டு எலெக்ட்ரிக் காரோட விலை இவ்ளோதானா! ரோட்ல கிடைக்கற கேப்ல அசால்டா பூந்து போயிரும்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். சிறிய உருவத்திற்காக இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் புகழ்பெற்றது. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அடிக்கடி பயணம் செய்ய கூடியவர்கள், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த காரை புதிதாக வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம், இந்த காரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை எக்ஸிக்யூட்டிவ் (Executive), எக்ஸைட் (Excite), எக்ஸ்க்ளூசிவ் (Exclusive) மற்றும் 100-இயர் எடிசன் (100-year Edition) ஆகிய வேரியண்ட்கள் ஆகும்.

MG Comet EV

இதில் ஆரம்ப நிலை வேரியண்ட்டான எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டின் விலையில் எம்ஜி நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனுடன் கூடிய டாப் வேரியண்ட்டான 100-இயர் எடிசன் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய வேரியண்ட்களின் விலை தலா 19 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன் இல்லாத எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலை 14 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மறுபக்கம் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன் இல்லாத எக்ஸைட் வேரியண்ட்டின் ஸ்டாண்டர்டு மாடலை வாங்குபவர்கள் இனி 12 ஆயிரம் ரூபாயையும், ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனுடன் கூடிய மாடலை வாங்குபவர்கள் இனி 17 ஆயிரம் ரூபாயையும் அதிகமாக வழங்க வேண்டும்.

MG Comet EV Side Design

இந்த விலை உயர்விற்கு பின்னர் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 7 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.84 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளன. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) நகர பயன்பாடுகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை சற்று உயர்த்தப்பட்டிருந்தாலும் கூட, இன்னமும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், விலை குறைவான ஒன்றாகவே இருந்து வருகிறது. இது இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தினமும் அலுவலகத்திற்கு கண்டிப்பாக காரில் சென்று வந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருபவர்கள் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 18:19 [IST]
English summary
Mg comet ev price hike by up to rs 19000 check all details here
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+