விலை 5 லட்ச ரூபா கூட இல்ல! இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் காரா! பைக் வாங்கறதுக்கு பதில் இதை வாங்கலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் 4 பேர் பயணம் செய்ய முடியும்.

அளவில் மிகவும் சிறியது என்ற காரணத்தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் திகழ்கிறது. செயல்திறனை பொறுத்தவரையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.4 kWh பேட்டரி (Battery) தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

MG Comet EV Dashboard Design

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும். அத்துடன் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.

இதில், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதிகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் 4 ஸ்பீக்கர்கள், கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகளையும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

MG Comet EV

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7,49,800 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் இந்த காரை பாஸ் (BAAS) திட்டத்தின் கீழ் நீங்கள் வாங்கினால், இன்னும் குறைவான விலையில் கிடைக்கும்.

பாஸ் திட்டத்தின் கீழ், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் இந்த முறையில் நீங்கள் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கினால், ஒரு கிலோ மீட்டருக்கு 3.10 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மிகவும் விலை குறைவானது என்பதுடன், அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியது என்பதால், இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பாக அமையவில்லை.

ஆம், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை சரிவடைந்துள்ளது. ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 912 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 1,200 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 288 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 24 சதவீத வீழ்ச்சி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் குறைவான விலையில் ஒரு சிறிய எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, எம்ஜி கோமெட் இவி மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 19, 2025, 14:05 [IST]
English summary
Mg comet ev sales report july 2025 24 per cent down
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+