5 லட்ச ரூபா கூட இல்ல! அடி மாட்டு விலையில் எலெக்ட்ரிக் கார்! டாடாவுக்கு நடுக்கம் எடுத்திருக்கும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இது தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்றாகும்.

இதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகவும் எம்ஜி கோமெட் இவி திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

MG Comet EV Interior

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), வி3 கார்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,007 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதம், 1,203 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த அக்டோபர் மாதத்தில், 196 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

MG Comet EV

இதன் மூலம் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை 16.29 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், கூடிய விரைவிலேயே எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் உடன் கூடிய ஐ-ஸ்மார்ட் போன்ற வசதிகளும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரை, 17.3 kWh பேட்டரியை, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 230 கிலோ மீட்டர்கள் என எம்ஜி மோட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7,49,800 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9,99,800 ரூபாயாக இருக்கிறது. இவை எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் BAAS (Battery As A Service) முறையில் வாங்கினால், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 3.1 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக எம்ஜி கோமெட் இவி கருதப்படுகிறது. கூடிய விரைவில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) மைக்ரோ எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 17:28 [IST]
English summary
Mg comet ev sales report october 2025 16 29 per cent down
மேலும்... #mg motor #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+