காரை போட்டோவில் பார்த்து எடை போடாதீங்க! குனிந்து கொண்டுதான் உள்ளே நுழையனும்னு அவசியமில்ல!

எம்ஜி மோட்டார் (MG Motor) உலகின் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. சமீப காலமாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்த பிறகு எம்ஜி மோட்டாரின் பிஸ்னஸ் மொத்தமாக மாறிவிட்டது.

குறைந்த விலையில் கோமெட் இவி (Comet EV) எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இந்திய எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை எம்ஜி அதிர வைத்தது. அதேபோல், இந்த பிரிட்டிஷ் கார் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காரின் விற்பனையும் சிறப்பாக உள்ளது.

mg cyber x concept unveiled

இன்னும் சொல்லப்போனால், எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பிரிட்டிஷ் கார் நிறுவனமாக இருப்பினும் எம்ஜி மோட்டாரை நிர்வகிப்பது சீனாவை சேர்ந்த SAIC மோட்டார் ஆகும். SAIC முன்னிலையில்தான் எம்ஜி மோட்டார் இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் உடன் கூட்டணி சேர்ந்தது.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் எம்ஜி மோட்டாரின் நெட்வொர்க் சிறப்பாகவே உள்ளது. இந்த நிலையில், உலகமே பார்த்து வியக்கும் சீனாவில் நடைபெற்றுவரும் 2025 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கலந்துக் கொண்டுள்ளது. எம்ஜி மோட்டார் சார்பில் இந்த முறை ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் பல புதிய வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

mg cyber x concept unveiled

அவற்றுள் ஒன்றாக, கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த புதிய எம்ஜி வாகனம் 'சைபர் எக்ஸ்' என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான கான்செப்ட் ஆகும். அதாவது, இந்த கான்செப்ட்டில் இருந்து எதிர்காலத்தில் எம்ஜி எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்று அறிமுகம் செய்யப்படும். எம்ஜி சைபர் சீரிஸில் இருந்து வெளிவந்துள்ள இரண்டாவது எலக்ட்ரிக் கார், சைபர் எக்ஸ் ஆகும்.

இதற்கு முன்னர், சைபர் இவி ரோட்ஸ்டர் (Cyber EV Roadster) எலக்ட்ரிக் கார் எம்ஜி சைபர் வரிசையில் முதலாவதாக வெளிவந்தது. புதிய எம்ஜி சைபர் எக்ஸ் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டின் தோற்றத்தை பொறுத்தவரையில், இது இளம் தலைமுறையினரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பெட்டகம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள சைபர் எக்ஸ் எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டின் முன்பக்கத்தில் நன்கு மேலாக எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

mg cyber x concept unveiled

முன்பக்கத்தில் கிரில் பகுதி நன்கு அகலமானதாக உள்ளது. காரின் பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளதால், மேற்கூரை அந்தரத்தில் பறப்பது போன்றதான எஃபெக்ட் கிடைக்கிறது. இரு நிறங்களிலான அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் டிண்ட் செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் சைபர் எக்ஸ் கான்செப்ட் வாகனத்தின் லுக்கை மெருக்கேற்றி காட்டுகின்றன.

மேட் (Matte) ஃபினிஷிங்கில் கருப்பு நிற பெயிண்ட்டில் ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள புதிய எம்ஜி சைபர் எக்ஸ் கான்செப்ட் வாகனம் மொத்தம் 4.3 மீட்டர்கள் நீளம் கொண்டதாக உள்ளது. கிட்டத்தட்ட இது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 (Land Rover Defender 90) காருக்கு இணையானது ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்த எம்ஜி கான்செப்ட் வாகனம் பார்ப்பதற்கும் கொஞ்சம் டிஃபெண்டர் 90 காரை போலவே உள்ளது.

ஆனால், டிஃபெண்டர் காரை போன்று ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தைரியமாக கொண்டு செல்லக்கூடியதாக சைபர் எக்ஸ் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம். ஏனெனில், சைபர் எக்ஸ் ஆனது நகரத்திற்குள் பயன்படுத்துவதற்கே ஏற்ற காராகும். மற்றப்படி, புதிய சைபர் எக்ஸ் கான்செப்ட்டில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி குறித்த விபரங்களை தற்போதைக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிடவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4.3 மீட்டர் நீளத்தில் காம்பெக்ட்டான உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், எம்ஜி சைபர் எக்ஸ் கான்செப்ட்டில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு உலகின் பல நாடுகளில் வரவேற்பு கிடைக்கும் என கணிக்கிறோம். இந்தியாவிலும் உள்பட. சீனாவில் விரைவாகவே இந்த கான்செப்ட்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் காரை உருவாக்க எம்ஜி ஆரம்பித்துவிடும். அதன்பின் இந்தியாவிற்கு அந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 26, 2025, 22:18 [IST]
English summary
Mg cyber x electric car concept showcased at 2025 shanghai auto show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X