காரை பார்த்தவுடன் பல கோடி ரூபாயில் விலை இருக்கும்னு நெனைச்சிடாதீங்க! எம்ஜி உருவாக்கிய புது எலக்ட்ரிக் கார்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் ஆக சைபர்ஸ்டர் (Cyberster) இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி நிறுவனம் உருவாக்கிய அதி வேகத்தில் இயங்கக்கூடிய காராக விளங்குவது மட்டுமின்றி, இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராகவும் சைபர்ஸ்டர் விளங்குகிறது.

ரூ.74.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி சைபர்ஸ்டர் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே இந்த ஜூலை மாத துவக்கத்திலேயே துவங்கப்பட்ட நிலையில், டெலிவிரிகள் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக சமீபத்தில் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது அறிவிக்கப்பட்டது. புதிய சைபர்ஸ்டரின் முக்கியமான 5 சிறப்பம்சங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

mg cyberster electric sports car

தோற்றம்: புதிய சைபர்ஸ்டர் கார் ஆனது பழமையான எம்ஜிபி ரோட்ஸ்டர் (MGB Roadster) காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும். அதேநேரம், இன்றைய கால வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அட்வான்ஸான டிசைன் ஹைலைட்களும் சைபர்ஸ்டரில் இடம்பெற்றுள்ளன. கத்திரிக்கோல் வடிவிலான கதவுகள் மற்றும் தேவைக்கு ஏற்ப நீக்கி பொருத்திக் கொள்ளக்கூடிய மேற்கூரை உடன் சைபர்ஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார் & செயல்திறன்: எம்ஜி சைபர்ஸ்டர் காரில் டபுள் எலக்ட்ரிக் மோட்டார் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எலக்ட்ரிக் மோட்டாரின் இயக்க ஆற்றல் ஒரே நேரத்தில் காரின் அனைத்து சக்கரங்களுக்கும் செல்லும். அதிகப்பட்சமாக 510 பிஎஸ் மற்றும் 725 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறும் சைபர்ஸ்டர் காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம்.

பேட்டரி & ரேஞ்ச்: சைபர்ஸ்டரில் எலக்ட்ரிக் மோட்டாரில் 77kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. திறன்மிக்கதாக இருப்பினும் வெறும் 110மிமீ மட்டுமே தடிமன் கொண்டதாக விளங்கும் இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 580கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என MIDC சான்றளித்துள்ளது. ஆனால், நிஜ உலகில் இந்த ரேஞ்ச் பல்வேறு காரணிகளால் சற்று குறைவாகவே கிடைக்கும்.

தொழிற்நுட்ப அம்சங்கள்: சைபர்ஸ்டர் காரின் உள்ளே முழுவதும் வ்ராப் ஆல் சூழப்பட்ட காக்பிட் மற்றும் ட்ரிபிள்-ஸ்க்ரீன் லே அவுட் வழங்கப்பட்டுள்ள நிலையில் டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் டச்ஸ்க்ரீன், டபுள்-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், காற்று சுத்திகரிப்பான், ஸ்டேரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்ட பெடில்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்: வலிமையான H-வடிவ தொட்டில் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள எம்ஜி சைபர்ஸ்டர் காரில் லெவல்-2 அடாஸ், ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில், அடாஸ் மூலமாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ரியல்-டைம் டிரைவர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி சைபர்ஸ்டர் காருக்கு எந்த அளவிற்கு இந்தியாவில் வரவேற்பு கிடைக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் எலக்ட்ரிக்கில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்க எத்தனை பேர் தயாராக உள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், மேற்கூறப்பட்ட காரின் சிறப்பம்சங்களை எல்லாம் பார்த்தால் நிச்சயமாக எவரொருவருக்கும் சைபர்ஸ்டர் காரை வாங்க தோன்றும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 5:00 [IST]
English summary
Mg cyberster electric sports car in india top things to know
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+