நம்பிக்கையா ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு 2.5 லட்ச ரூபா விலை கம்மி! ஒருமுறை சார்ஜ் செய்தால் 580கிமீ பயணம்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), சமீப காலமாக இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வரும் கார் நிறுவனம். 2019ஆம் ஆண்டிலேயே இந்திய கார் சந்தையில் நுழைந்துவிட்டாலும், கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்த பிறகே எம்ஜி மோட்டாரின் வணிகம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு எம்ஜி அறிமுகம் செய்த கோமெட் இவி (Comet EV) மற்றும் விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) இந்திய மக்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்று வருகின்றன. இதனால் எம்ஜி மோட்டாரின் கவனம் முழுவதும் எலக்ட்ரிக் கார்கள் மீதே உள்ளது.

mg m9

அதன் வெளிப்பாடாக, சமீபத்தில் எம்ஜி எம்9 (M9) என்கிற எலக்ட்ரிக் எம்பிவி கார் இந்த நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டது. மேலே கூறப்பட்ட கோமெட் இவி மற்றும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்களை போல் இல்லாமல், எம்9 ஆனது எம்ஜி மோட்டாரின் விலையுயர்ந்த மற்றும் அளவில் பெரியதான எலக்ட்ரிக் காராக இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், தனது அடுத்த ஆச்சிரியப்படுத்தும் எலக்ட்ரிக் காராக சைபர்ஸ்டர் (Cyberster) காரை இந்தியாவில் எம்ஜி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதுவும் விலைமிக்க எம்ஜி எலக்ட்ரிக் கார் ஆகும். இதைவிட நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சைபர்ஸ்டர் ஆனது எம்ஜி மோட்டாரின் அதிவேகமாக இயங்கக்கூடிய முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

mg cyberster electric sports car launched

எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே எலக்ட்ரிக் பவரில் இயங்கக்கூடிய முதல் ஸ்போர்ட்ஸ் காராக எம்ஜி சைபர்ஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சைபர்ஸ்டர் காரை இந்தியாவிற்கு கொண்டுவர கடந்த பல மாதங்களாகவே எம்ஜி நிறுவனம் யோசித்துவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

எம்ஜி செலக்ட் (MG Select) ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ள சைபர்ஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.74 லட்சத்து 99 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலை ஆனது இனி இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை முன்பதிவு செய்பவர்களுக்கானது ஆகும். ஏற்கனவே இந்த காரை ப்ரீ-புக்கிங் (Pre-booking) செய்தவர்களுக்கான எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom) விலையாக ரூ.72 லட்சத்து 49 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

mg cyberster electric sports car launched

டபுள் மோட்டார் செட்-அப்பை கொண்ட எம்ஜி சைபர்ஸ்டர் காரில் அதிகப்பட்சமாக 510 பிஎஸ் மற்றும் 725 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கும். இந்த காரில் பொருத்தப்படும் 77kWh திறன் கொண்ட பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 580கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என எம்ஜி நிறுவனம் தெரிவிக்கிறது.

0-இல் இருந்து 100km/h வேகத்தை இந்த காரில் வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம். பேட்டரிக்கு முழு ஆயுட்கால உத்தரவாதம் என்கிற சிறப்பான உத்தரவாதத்துடன் விற்பனைக்கு வந்துள்ள எம்ஜி சைபர்ஸ்டர் காரை புக் செய்பவர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகளை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் துவங்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்த பிறகு எம்ஜி மோட்டார் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் சிக்சராக உள்ளது. சைபர்ஸ்டர் காரை மிடில்-கிளாஸ் மக்கள் நிறைய பேர் வாங்க போவது இல்லை என்றாலும், இந்தியாவில் எம்ஜி மோட்டர் பிராண்டை பணக்காரர்கள் மத்தியிலும் பிரபலமாக்குவதற்கு சைபர்ஸ்டர் கார் பெரிதும் உதவியாக இருக்கும் என்பது உறுதி.

Source: JSW MG Motor India/ Press Release

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 15:19 [IST]
English summary
Mg cyberster electric sports car launched in india price features range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X