இப்ப புக் பண்ணா பொங்கலுக்கு தான் டெலிவரி கிடைக்கும்! அப்படி இந்த கார்ல என்னதாங்க இருக்குது?
எம்ஜி நிறுவனம் தனது சைபஸ்டர் காரை இந்தியாவில் பரபரப்பாக விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காருக்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாகியுள்ளது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்க என்ன காரணம்? அப்படி இதில் என்ன இருக்கிறது? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக எம்ஜி சைபஸ்டர் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விற்பவனை செய்து வருகிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 2 மாதங்களே ஆகும் நிலையில் நிலையில் இந்த காரை இதுவரை 256 பேர் வாங்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்ல தற்போதும் புக்கிங் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி சைபஸ்டர் கார் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட சொகுசு காராக இருக்கிறது. இந்த காரக்கு தற்போதும் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தற்போத இந்த காரை புக் செய்தால் 4 மாதங்களுக்கு பிறகு தான் டெலிவரி எடுக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த காருக்கு 120 நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எம்ஜி சைபஸ்டர் காரை பொருத்தவரை 77kwhபேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் முன்பக்க ஆக்ஸில் பகுதியில் ஒன்றும், பின்பக்க ஆக்ஸில் பகுதியில் ஒன்றும் வழங்கப்ப்டடுள்ளது. இந்த மோட்டார் 503 பிஎச்பி பவரையும் 725 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கார் சூப்பர் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது. இந்தகார் முழு சார்ஜில் 580 கி.மீ பயணிக்கும் என எம்ஐடிசி சான்றளித்துள்ளது. நீண்ட தூரம் பயணிக்க இந்த கார் ஏற்ற காராக இருக்கும். எம்ஜி சைபஸ்டர் கார் பாதுகாப்பு விஷயத்திலும் சிறப்பான காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் லெவல் 2 அடாஸ், டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம், ரியல் டைம் அலர்ட், டுயல் முன்பக்க ஏர்பேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரின் உள்ள 10.25 இன்ச் சென்டரல் டச்ஸ்கிரீன் மற்றும் 7 இன்சில் இரண்டு டிஜிட்டல் பேனல்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ74.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இந்தகாரின் விலை அதிகமாக உள்ளது. இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால் விலை குறைய வாய்ப்புள்ளது. விற்பனை எதிர்பார்த்தை விட அதிகமாக இருந்தாலும் இந்தியாவிலேயே தயாரிக்கும் அளவிற்கு விற்பனை அதிகமாகவில்லை. எதிர்காலத்தில் அப்படி அதிகரித்தால் தயாரிப்பு இந்தியாவில் நடக்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அதிக விலையில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும்போது பெரிய அளவில் விற்பனையை அந்நிறுவனமே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இந்த கார் எதிர்பார்த்ததை விட அதிக விலையில் விற்பனையாவதால் தொடர்ந்து இந்த காரின் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம்திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









