காரை பார்த்ததும் யாருக்கும் கையும் ஓடல, காலும் ஓடல! இந்திய சாலையில் என்ன செய்யுது?

சூப்பர் கார்கள் (Super Cars)-க்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டில் இல்லை என்பது உண்மை தான். இருப்பினும், மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் விலையுயர்ந்த கார்களை வாங்குவதற்கும் அதிக பேர் இருக்கின்றனர். இதன் காரணமாகவே இந்தியாவில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் புதிய சூப்பர் காரை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான பணிகளில் எம்ஜி நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டுவரும் நிலையில், எம்ஜியின் புதிய சூப்பர் கார் அறிமுகத்திற்கு முன்னதாக பொது வெளியில் காட்சி தந்துள்ளது.

பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் சீனாவின் SAIC மோட்டார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்தியாவில் பிரபலமான JSW குழுமத்தின் கீழ் எம்ஜி மோட்டார் செயல்பட்டு வருகிறது. எம்ஜி - ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையேயான இணைவு சமீபத்தில்தான் நடந்தது.

mg cyberster spotted in india

இந்த கூட்டணி ஏற்பட்ட பின்பு எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகள் இந்தியாவில் மொத்தமாக மாறிவிட்டது. கோமெட் இவி (Comet EV) என்கிற விலை குறைவான எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ அறிமுகம் செய்து மொத்த இந்திய கார்கள் மார்க்கெட்டையும் அதிர வைத்தது. அதன்பின், விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற மற்றொரு எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து எம்ஜி புதிய புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

பேட்டரி குத்தகை முறையில் கிடைக்கும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் அதன் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் புதிய சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற விலையுயர்ந்த சூப்பர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

mg cyberster spotted in india

இதற்கிடையில், எம்ஜி சைபர்ஸ்டர் கார்கள் தொடர்ச்சியாக பொது வெளியில் காட்சி தந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது காட்சி தந்துள்ள சைபர்ஸ்டர் காரில் சிவப்பு நிறத்தில் குஜராத் மாநில நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதை காணலாம். இந்த சைபர்ஸ்டர் கார் எம்ஜி நிறுவனத்தின் அதிகார்கள் அல்லது டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

ஏனெனில், இந்தியாவில் தற்காலிக பயன்பாட்டிற்காகவே சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்படுவது வழக்கம். சைபர்ஸ்டர் காரும் எம்ஜி மோட்டாரின் புதிய எலக்ட்ரிக் கார் ஆகும். ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.80 லட்சம் வரையிலான விலைகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் முன்பக்கத்தில் மெல்லியதான ஹெட்லைட்கள் மற்றும் ஏரோடைனாமிஸுக்கு ஏற்ப வளைக்கப்பட்ட பம்பர் வழங்கப்படுகின்றன.

mg cyberster spotted in india

20-இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெறும் சைபர்ஸ்டர் காரில் இரு கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த காரில் மேற்கூரையை தேவையென்றால் மடக்கி கொள்ளலாம். காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் எம்ஜி சைபர்ஸ்டர் காரில் 77kWh பேட்டரி உடன் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தான் அறிமுகம் செய்வது என்பதில் எம்ஜி மோட்டார் நிறுவனம் உறுதியாக உள்ளது. அது விலை குறைவான காராக இருந்தாலும் சரி, சைபர்ஸ்டர் போன்ற விலைமிக்க காராக இருந்தாலும் சரி எலக்ட்ரிக்கில் தான் அறிமுகம் செய்வேன் என எம்ஜி தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2025, 16:13 [IST]
English summary
Mg cyberster spotted with red colour number plate in india
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X