வெறும் 16 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாமே நல்லா இருந்தும் ஏன் விக்கல?
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் பிரபலமான கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் எம்ஜி நிறவனம் குளோஸ்டர் காரை விற்பனை செய்வதில் திண்டாடி வருகிறது. கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்ன மோசமான விற்பனையை பெற்றுள்ளது? விரிவாக காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் தனது பிரபலமான கார்களால் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இந்நிறுவனம் எம்ஜி விண்ட்ஸர் என்ற இவி காரையும் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் கூட மொத்தம் 4000 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் அதே நேரம் எம்ஜி குளோஸ்டர் இவி கார் காரின் விற்பனையில் இந்நிறுவனம் திண்டாடி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் மொத்தம் 16 குளோஸ்டர் காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் விற்பனை 91 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வளவு மோசமான விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு முக்கியமான காரணம் அதன் விலை தான். இந்த காரில் அம்சங்கள், இன்ஜின், ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளது.
எம்ஜி நிறுவனம் தனது குளோஸ்டர் காரை பொருத்தவரை 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த எம்ஜி குளோஸ்டர் காரை பொருத்தவரை மார்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரீடியன், ஸ்கோடா கோடியாக், ஆகிய அம்சங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் மார்கெட்டில் ரூ39.57 லட்சம் முதல் ரூ44.74 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 161 பிஎச்பி பவரையும் 373 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த இன்ஜின் 215 பிஎச்பி பவரையும், 478என்எம் டார்க் திறனை வழங்குகிறது.

இந்த கார் இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்யும் முக்கியமான காராக இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகும் காராக இல்லாவிட்டாலும் சிறந்த காராக இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ஒரு பக்கம் போட்டியை வழங்கி வந்தாலும் நீண்ட காலமாக அப்டேட் இல்லாமல் இருக்கிறது.
இந்த கார் அப்டேட் செய்யப்பட்டால் நிச்சயம் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மிகப்பெரிய காராக இருகு்கிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்றகாராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் தொடர்ந்து இந்த ரக கார்களுக்கான தேவை அதிகமாக தான் இருக்கிறது.
எம்ஜி நிறுவனம் இதுவரை இந்த காரை அப்டேட் செய்யும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் இந்த காரின் விலை அதிமாக இருப்பதால் விற்பனை குறைவாக தான் இருக்கிறது. இந்த காரின் விலையை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டாலும் ்தன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நிச்சயம் நீண்ட நாட்கள் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் என்னதான் நல்ல கார்களை விற்பனை செய்தாலும் எம்ஜி குளோஸ்டர் கார் போன்ற கார்கள் சிறப்பாக விற்பனையாகவில்லை என்பது வருத்தமான செய்திதான். ஆனால் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டால் நிச்சயம் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









