30 நாளில் 35 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க! என்ன காரணம் தெரியுமா?
எம்ஜி நிறுவனம் தனது குளோஸ்டர் காரின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட கடந்த செப்டம்பர் மாதம் 88.4 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது இந்த கார் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது. பலர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் ப்ரீமியம் டி2 செக்மென்ட் எஸ்யூவி காரில் எம் ஜி குளோஸ்டர் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் அதிக விலை கொண்ட கார் என்பதால் குறைவான எண்ணிக்கையில் தான் வழக்கமாக விற்பனையாகும். இன்றையில் கடந்த செப்டம்பர் மாதம் மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது. வெறும் 35 கார்கள் தான் விற்பனையாகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனையாக ஒப்பிடும் போது 88.4 சதவீதம் விற்பனை குறைவாகும்.

இந்த விற்பனை குறைவு என்பது புதிதாக நடக்கும் ஒன்று அல்ல. கடந்த ஆறு மாதமாக இந்த காரின் விற்பனை மிக குறைவாக தான் இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெறும் நான்கு கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. மே மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. ஜூன் மாதம் 34 கார்களும் ஜுலை மாதம் 16 கார்களும் ஆகஸ்ட் மாதம் 13 கார்களும் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திலேயே அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் மாதம் தான் 35 நாட்கள் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை அதிகமாக இருந்தாலும் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இந்த காரின் அப்டேட் மற்றும் புதிய மாடலின் வருகைக்காக மக்கள் காத்திருப்பதால் தற்போது இந்த காரின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது என சொல்லலாம். இந்த கார் மார்க்கெட்டில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

எம்ஜி குளோஸ்டர் காரின் புதிய அறிமுகத்திற்காக மக்கள் பல காத்திருக்கிறார்கள். புதிய அறிமுகத்தில் புதிய தொழில்நுட்பம் புதிய அம்சங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட டிசைன் ஆகியவை இடம்பெரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாக பல புதிய வகை காத்திருக்கிறார்கள். ஆனால் எம்ஜி நிறுவனம் இதுவரை எந்தவிதமான அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்த கார் குறித்து எம்ஜி நிறுவனம் அப்டேட்டை வெளியிடவிட்டாலும் மக்கள் மத்தியில் இதை அப்டேட் செய்யும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது விற்பனையாகி வரும் எம் ஜி குளோசப் காரை பொறுத்தவரை 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது டர்போ டவின் டர்போ ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2வில் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய இரண்டு விதமான விஷயங்கள் கிடைக்கிறது. இந்த செக்மெண்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்த கார் ரூபாய் 38.33 லட்சம் முதல் ரூபாய் 43.74 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.

சமீபத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த பிறகு இந்த காரின் விலை ரூபாய் 3 லட்சம் வரை குறைந்துள்ளது. அதற்கு முன் கடந்த ஜூலை மாதம் தான் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் 1.5% வரை விலை உயர்வு ஏற்றப்பட்டது. இதனால் இந்த காரின் விலை ரூபாய் 1.5 லட்சம் வரை கூட ஏறியது. தற்போது மூன்று லட்சம் வரை விலை குறைந்துள்ளதால் மக்கள் பலர் இந்த காரையும் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் விற்பனை அதிகமாக இருந்தாலும், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விற்பனையை எட்டி கூட பிடிக்க முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை அதிகமாக இருந்தாலும், இந்த பிரிமியம் எஸ்யூவி ரக செக்மெண்ட் விற்பனை குறைவாக தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அதிகமான விலை தான் இவ்வளவு அதிக விலை கொடுத்து கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் குறைவாக இருப்பதால் இதன் விற்பனையும் குறைவாக இருக்கிறது. இதே கார் சற்று குறைவான விலையில் சில மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்தால் ஏன் விற்பனை மிக அதிகமாக இருக்கும். தற்போது உள்ள காரை அப்டேட் செய்யப்பட்டால் கூட விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications









