வெறும் 5 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! இந்த கார்ல அப்படி என்ன இல்லன்னு விக்கல?
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் சிறப்பாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனத்தின் விண்ட்ஸர் இவி கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்நிறுவனம் விற்பனை செய்யும் மற்றொரு கார் விற்பனையில் மந்தமாகிக்கொண்டே வருகிறது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விண்டஸர் என்ற இவி காரை கொண்ஐ வந்த பிறகு சிறப்பாக விற்பனையை கடந்த சில மாதங்களாக பெற்று வருகிறது. இந்த கார் அறிமுகமானது முதல் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இவி செக்மெண்டில் இந்த கார் ஒரு புரட்சியே செய்து வரகிறது. என சொல்லலாம்.

ஆனால் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஜி குளோஸ்டர் கார் கடந்த சில மாதங்களாக சிறப்பாக விற்பனையை பெற வில்லை. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் முழவதும் வெறும் 5 கார்கள் மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 6 மாதத்தில் கடந்த நவம்பர் மாதம் தான் மோசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 34 கார்கள், ஜூலை மாதம் 16 கார்கள், ஆகஸ்ட் மாதம் 13 கார்கள், செப்டம்பர் மாதம் 35 கார்கள், அக்டோபர் மாதம் 9 கார்கள், நவம்பர் மாதம் 5 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ38.33 லட்சம் முதல் ரூ43.17 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலையும் இந்த காரின் குறைவான விற்பனைக்கு காரணமாக இருக்கலாம்.

எம்ஜி குளோஸ்டர் காரை பொருத்தவரை 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் புட்புறம் மெட்டாலிக் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஆஷ் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளுது. இதில் ரூஃப் பகுதியில் டார்க் தீம் வழங்கப்பட்டுள்ளுது. இந்த காரில் ஸ்மோக்குடு டெயில் லைட், ரூஃப் ரெயில்கள், ஜன்னலை சுற்றியுள்ள பகுதி, ஃபென்டர் மற்றும் ஃபாக்லைட் பகதி எல்லாம் டார்க் தீமில் உள்ளது.
இந்த காரில் டுயல் பானரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 வழிகளில் அட்ஜெட் செய்யக்கூடிய டிரைவர் சீட், டிரைவர் சீட்டில் மசாஜ் மற்றும் வென்டிலேஷன் அம்சங்கள், ரைடிங் மோடுகள், சாண்ட், எக்கோ, ஸ்போர்ட், நார்மல், ராக், ஸ்னோ மற்றும் மட் ஆகிய ரைடு மோடுகள், உள்ள இந்த காரில் பிளாக் ஸ்டோம் வெர்ஷனும் உள்ளது.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளன. அடாஸ் அம்சத்தில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஆட்டோமெட்டிக் பார்க்கி்ங அசிஸ்ட், முன்பக்க மோதல் வார்னிங், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், டோர் ஓப்பன் வார்னிங், பின்பக்க கியாஸ் அலர்ட்,லேன் சேஞ்ச் அசிஸ்ட், டிரைவர் மயக்கமாக இருப்பதை கண்காணிக்கும் கருவி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் கார் மீது பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்கள் இல்லை என்றாலும் அதன் விலை அதிகமாக உள்ளது.சமீபத்தில் மஹிந்திரா அறிமுகப்படுத்திய இவி கார்கள் கூட இந்த விலையில் இல்லை என்றபாதல் மக்கள் பலர் எம்ஜி குளோஸ்டர் காரை விரும்ப வில்லை என கூறலாம்.


Click it and Unblock the Notifications









