மாருதி, டாடா கதை முடிஞ்சுது! நம்பவே முடியாத குறைவான விலையில் களமிறங்கிய புது கார்! இதை கொஞ்சம் கூட எதிர்பாக்கல

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் இன்று (டிசம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பெட்ரோல் வேரியண்ட்கள் (Petrol Variants) மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் டீசல் வேரியண்ட்கள் (Diesel Variants) கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MG Hector Facelift Side View

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பெட்ரோல் வெர்ஷன் 5 சீட்டர், 7 சீட்டர் என 2 விதமான இருக்கை அமைப்புகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 5 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், தற்போது விற்பனையில் உள்ள மாடலின் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது, ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 2 லட்ச ரூபாய் குறைவு ஆகும்.

அதே நேரத்தில் 5 சீட்டர் மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 7 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை 17.29 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.49 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

MG Hector Facelift

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (Engine) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை (Safety Features) எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது.

இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுதவிர வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ஏராளமான அதிநவீன வசதிகளையும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கொண்டுள்ளது.

இதில், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகையால், இனி வரும் காலங்களில், எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar), கியா செல்டோஸ் (Kia Seltos), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) போன்ற கார்களுக்கு எல்லாம், எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 15, 2025, 14:16 [IST]
English summary
Mg hector facelift launched in india price safety features engine gear box options
மேலும்... #mg motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+