காருக்குள் குடும்பமே நடத்தலாம்... 17 அடி நீளத்தில் லாரிகளுக்கு டஃப் கொடுக்கும் எலக்ட்ரிக் கார்!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் சமீப ஆண்டுகளில் கவனிக்கத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனமும், இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் இணைந்து உருவானதே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆகும். இந்த கூட்டணி ஆனது சமீபத்தில்தான் உருவானது. உண்மையில் சொல்லப்போனால், இந்த கூட்டணி உருவானதற்கு பிறகே எம்ஜி நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்க ஆரம்பித்தன.
குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் எம்ஜி நிறுவனம் கூடுதல் முனைப்பு காட்ட துவங்கியது. அதன்படி, இந்தியாவிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் காராக கோமெட் இவி (Comet EV) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து BaaS திட்டத்தில் விண்ட்சர் இவி (Windsor EV) அறிமுகம் செய்யப்பட்டது.

கோமெட் இவி எலக்ட்ரிக் காருக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் என நாம் எதிர்பார்த்த நிலையில், நம் கணிப்புக்கு மாறாக எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் விண்ட்சர் இவி ஒரு புரட்சியையே ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அடுத்த எலக்ட்ரிக் காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் கார், எம்ஜி எம்9 (M9) என்கிற விலையுயர்ந்த லக்சரியான எலக்ட்ரிக் கார் ஆகும். சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே எம்ஜி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் கூட எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது, இந்தியாவில் எம்9 எலக்ட்ரிக் காருக்கான புக்கிங்குகள் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என எம்ஜி நிறுவனம் அறிவித்தது.
அதனை தொடர்ந்து, ஏப்ரலில் இருந்து புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கவே தாமதமாகி விட்டது. எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ஒருவழியாக இந்த மே மாதத்தில் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த லக்சரி எலக்ட்ரிக் எம்பிவி (MPV) காருக்கான முன்பதிவுகளை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்க துவங்கி உள்ளது.
தற்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதால், இந்த எலக்ட்ரிக் காரின் விற்பனை விரைவில் துவங்கப்படும் என கூறப்படுகிறது. எம்9 எலக்ட்ரிக் காரை முன்பதிவு செய்ய விருப்பப்படுபவர்கள் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எம்ஜி செலக்ட் (MG Select) இணையத்தள பக்கத்தை அணுகவும். இந்த காரை புக் செய்ய ரூ.51,000 டோக்கன் தொகை செலுத்த வேண்டும்.
இந்தியாவில் எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் நேரடி போட்டியாக எந்த காரும் இல்லை. தோற்றத்தில் கியா கார்னிவல் (Kia Carnival) மற்றும் டொயோட்டா வெல்ஃபைஃபர் (Toyota Vellfire) கார்களை போன்று உள்ளதால், அவற்றிடம் இருந்து போட்டி இருக்கலாம். ஆனால், இவை இரண்டும் எலக்ட்ரிக் கார் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இவ்வாறான லக்சரியான எம்பிவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. கார்னிவல் மற்றும் வெல்ஃபைஃபர் கார்கள் மூலம் இந்த தேவை உருவாகி உள்ளது. இதன் மூலமாக, புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காருக்கும் நிறைய கஸ்டமர்கள் கிடைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எம்9 எலக்ட்ரிக் காரின் விலை எந்த அளவிற்கு இந்தியாவில் நிர்ணயிக்கப்பட உள்ளது என்பதை பொறுத்து தான் அதன் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








