இந்த எலக்ட்ரிக் காரை விட 6 லட்ச ரூபா கம்மியான விலையில் கியா கார்! டீசல் காரை வாங்க விரும்புபவர்களுக்கான சாய்ஸ்

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்9 (M9) என்கிற விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை என்றாலும், விலையை பொறுத்தவரையில், கியா (Kia) நிறுவனத்தின் கார்னிவல் (Carnival) போட்டியாக இருக்கும். அளவில் பெரிய தோற்றம் கொண்ட இந்த இரு எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

விலை: கியா கார்னிவல் காரை போலவே, புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரும் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கியா கார்னிவலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.63.91 லட்சம் என இருக்கும் என நிலையில், எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

mg m9 electric car vs kia carnival mpv

பவர்டிரெயின் (Powertrain): இந்த விஷயத்தில்தான் கியா கார்னிவலுக்கும், எம்ஜி எம்9 காருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஏனெனில், புதிய எம்9 ஆனது எலக்ட்ரிக் கார் ஆகும். அதுவே, கியா கார்னிவலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 441 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

கார்னிவலில் லிட்டருக்கு 14இல் இருந்து 15கிமீ மைலேஜை பெற முடிகிறது. மறுப்பக்கம், புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரில் 90kWh பேட்டரி பேக் ஆனது காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 548கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

mg m9 electric car vs kia carnival mpv

பரிமாண அளவுகள்: கியா கார்னிவல் காரை காட்டிலும் புதிய எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் 115மிமீ கூடுதல் நீளமானது. நீளத்தில் மட்டுமின்றி, 5மிமீ அகலத்திலும், 65மிமீ உயரத்திலும் எம்ஜி எம்9 எலக்ட்ரிக் கார் பெரியதாக உள்ளது. இவற்றுடன், எம்9 எலக்ட்ரிக் காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவும் 110மிமீ அதிகமாக உள்ளது.

டிசைன்: எலக்ட்ரிக் கார் என்பதால், எம்9 எலக்ட்ரிக் காரின் முன்பக்க கிரில் பகுதி ஆனது மூடப்பட்டதாக உள்ளது. இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரை சுற்றிலும் க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுப்பக்கம், கியா கார்னிவல் ஆனது முரட்டுத்தனமான தோற்றத்தை அகலமான முன்பக்க கிரில், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் L-வடிவிலான டி.ஆர்.எல்-கள் உடன் கொண்டதாக உள்ளது.

mg m9 electric car vs kia carnival mpv

தொழிற்நுட்ப அம்சங்கள்: விலையுயர்ந்த கார்கள் என்பதால், எம்ஜி எம்9 மற்றும் கியா கார்னிவல் என இரண்டிலும் அசத்தலான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில், லெவல்-2 அடாஸ் (ADAS) இரு கார்களிலும் வழங்கப்படுகின்றன. எம்9 காரில் பனோராமிக் சன்ரூஃப், போலியான-லெதரினாலான கேபினும், கார்னிவல் காரில் ட்யூயல் சன்ரூஃப்கள், போஸ் சவுண்ட் சிஸ்டமும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்த இரு கார்களுமே அளவில் நன்கு பெரியதான மற்றும் சொகுசு வசதிகள் மிகுந்த எம்பிவி (MPV) ரக கார்களாகும். அதற்கேற்ப இவற்றின் விலைகளும் பல இலட்ச ரூபாயில் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எம்ஜி எம்9 ஆனது எலக்ட்ரிக் காராக தனித்து தெரிந்தாலும், இந்த இரு கார்களில் ஒன்றை தேர்வு செய்வது என்பது கடினமான காரியமாகும். இருப்பினும், இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ள விபரங்களை வைத்து இந்த இரு கார்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 22, 2025, 5:00 [IST]
English summary
Mg m9 electric car vs kia carnival mpv check full car comparison here
மேலும்... #mg motor #kia #car comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X