சாலையில் ஓடும் உல்லாச கப்பல்! இந்தியாவே எதிர்பார்க்கும் எம்ஜி எலெக்ட்ரிக் கார் நாளை களத்தில் இறங்குகிறது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று எம்ஜி எம்9 (MG M9). எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்த எம்ஜி எம்9 கார், இந்திய சந்தையில் நாளை (ஜூலை 21) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ட்யூயல் டிஜிட்டல் ஸ்க்ரீன்கள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் என ஏராளமான சொகுசு வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 13 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் ஐஆர்விஎம், கேபின் ஏர் ஃபில்டர், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி கொண்டுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் காரில், 90 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 548 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிகிறது. உருவத்தில் பெரிய எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் ஒன்று இந்த டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி காரின் பவர் அவுட்புட் 245 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் ஆக உள்ளது. இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். அத்துடன் V2L மற்றும் V2V தொழில்நுட்பங்கள் போன்ற அம்சங்களையும், எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி கார் கொண்டுள்ளது.
160 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரின் பேட்டரியை, வெறும் 90 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். ஆனால் 11 kW ஏசி சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரியை முழுமையாக நிரப்ப 10 மணி நேரம் ஆகும்.
இந்திய சந்தையில் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும். அது பிரஷிடென்ஷியல் லிமோ (Presidential Limo) வேரியண்ட் ஆகும். இது எம்பிவி ரகத்தை சேர்ந்தது என்பதால், மொத்தம் 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி காரின் விலை 60-70 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Expected Ex-showroom Price) ஆகும். இருப்பினும் எம்ஜி எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நாளை நமக்கு தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications








