ஃபார்ச்சூனர் எல்லாம் ஒரம்போ! இனி இந்த காரை தான் அரசியல்வாதிகள் வாங்கப்போறாங்க!

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் 3 வரிசை சீட்டர் கொண்ட சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி காராக தனது எம்9 காரை இந்திய மார்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரவுள்ளது. இந்த கார் வரும் 21ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காணப்போகிறோம்.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 3 வரிசை சீட்டர் கொண்ட சொகுசு ரக எம்பிவி காராக எம்9 என்ற காரை வரும் 21ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதல் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங் கடந்த மே மாதமே துவங்கிவிட்டது. ரூ51 ஆயிரம் முன்பணம் செலுத்தி இந்த காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Mg M9 EV

எம்ஜி நிறுவனம் இந்த காரை தனது பிரிமியம் கார்களை விற்பனை செய்யும் பிராண்டான எம்ஜி செலெக்ட் மூலம் விற்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த டீலர்ஷிப் மூலம் தான் எம்ஜி சைபர்ஸ்டர் கார் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில எம்ஜி எம்9 கார் இந்திய மார்கெட்டில் விற்பனையாகும் டொயோட்டா வில் ஃபயர், கியா கார்னிவெல் போன்ற சொகுசு எம்பவி கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது.

எம்ஜி நிறுவனம் இந்த எம்9 காரை இந்தியாவில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கார் இந்தியாவில் ரூ65-70 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த காரில் 90kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழுமையான சார்ஜிில் 500 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் முன்பக்கம் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

Mg M9 EV

இந்த காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 241 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் தறினையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சம் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் பேட்டரியை 5 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் ஏற்ற 8.5 மணி நேரம் தேவைப்படும். இதற்காக 11 kW சார்ஜரை பயன்படுத்த வேண்டும்.

இந்த கார் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்யும். இது டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏறும் போது 30-80 சதவீத பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடும். இந்த கார் 3 வரிசை சீட்டர் கொண்ட கார் என்பதால் நீளமான காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 5270 மிமீ நீளம், 2000 மிமீ அகலம், 1840 மிமீ உயரம் மற்றும் 3200 மிமீ வீல்பேஸ் கொண்ட காராக இருக்கிறது அளவுகளில் அதன் போட்டியாளர்களான கார்னிவெல், வில்ஃபயர் போன்ற கார்களை விட பெரியதாக இந்த கார் இருக்கிறது.

Mg M9 EV

சர்வதேச அளவில் இந்த கார் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த இரண்டு வேரியன்ட்களிலும் ஃபெர்பார்மென்ஸ், பாதுகாப்பு அம்சங்கள் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. இதில் இருக்கும் வித்தியாசம் லேதர் சீட்டுகள், இரண்டாவது வரிசையில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஒட்டோமென் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் டாப் வேரியன்ட் பிரஸிடென்ஸியல் லீமோ என அழைக்கப்படுகிறது. இதில் மெட்டல் பிளாக், கான்கிரீட் கிரே, பியர்ல் லஸ்டர் ஒயிட், ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரில் 3 ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல், 2வது வரிசை சீட்டில் ஓட்டோமேன் சீட்கள் ஹீட்டிங் மற்றும் கூலிங், மசாஜ் வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த கார் நிச்சயம் பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விலை அதிகமாக இருப்பதால் ஃபார்ச்சூனர் காரை வாங்கும் பலர் இந்த காரை வாங்க கூட வாய்ப்புள்ளது!

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 12:10 [IST]
English summary
Mg m9 ev launch india july 21 luxury features
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X