இதுமாதிரி இன்னும் ஒரு எலக்ட்ரிக் காரை கொண்டுவந்தால் எம்ஜியை அடிச்சிக்க முடியாது! 4இல் 3 பேர் வாங்கும் கார்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புது, புது எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட்டு மார்க்கெட்டில் ஹிட் அடித்து வருகின்றன. கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) என இந்த லிஸ்ட் நீண்டுக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப எம்ஜி கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறது என்பதை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் சீனாவின் SAIC நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தற்சமயம் செயல்பட்டு வருகிறது. எம்ஜி நிறுவனத்திற்கும், இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்திற்கும் இடையே சமீபத்தில்தான் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த கூட்டணிக்கு பிறகே இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்க அளவில் மாற்றம் கண்டன.

mg motor car sales report

குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் எம்ஜி நிறுவனம் கூடுதல் முனைப்பு காட்ட துவங்கியது. அது இந்த நிறுவனத்துக்கு வெற்றியும் கொடுத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடத்தை பிடித்து இருப்பினும், எம்ஜி மோட்டார் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சி உடன் 2வது இடத்தை தனதாக்கியது.

இந்த 2025ஆம் வருடத்தில் எம்ஜியின் இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் குறிப்பாக எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பெரிய முன்னேற்றத்தை எம்ஜி நிறுவனம் கண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், எம்ஜி மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்படும் மொத்தம் கார்களில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.

mg motor car sales report

கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் எம்ஜி நிறுவனத்தில் இருந்து மொத்தம் 5 ஆயிரத்து 829 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஏப்ரலில் 4 ஆயிரத்து 485 கார்கள் மட்டுமே எம்ஜி மோட்டாரில் இருந்து விற்பனை செய்யப்பட்டன. இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் எம்ஜி கார்கள் விற்பனை ஆனது 30% அதிகரித்துள்ளது.

நாம் அனைவரும் எதிர்பார்த்ததை போல், எம்ஜி மோட்டாரில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 660 ஆகும். அதாவது, எம்ஜி மோட்டாரின் மொத்த விற்பனையில் விண்ட்சர் இவி காரின் பங்களிப்பு மட்டும் 60 சதவீதத்திற்கும் மேல் ஆகும்.

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தின்போது எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் விற்பனையில் இல்லை. இந்த எலக்ட்ரிக் காருக்கு அடுத்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி காராக 2வது இடத்தில் ஹெக்டர் (Hector) உள்ளது. இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த முதல் காரான ஹெக்டர் கடந்த மாதத்தில் 977 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, 2024 ஏப்ரலில் 1,813 ஹெக்டர் கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், ஹெக்டர் கார்கள் விற்பனை 46% குறைந்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தில் மற்றொரு எம்ஜி எலக்ட்ரிக் காரான இசட்.எஸ் இவி (ZS EV) உள்ளது. கடந்த மாதத்தில் 864 இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், 191 கோமெட் இவி எலக்ட்ரிக் கார்கள், 133 அஸ்டர் கார்கள் மற்றும் நான்கு க்ளோஸ்டர் கார்களையும் கடந்த மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை போன்று இன்னொரு தரமான எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், எம்ஜி நிறுவனத்தின் விற்பனை பிச்சிக்கும். கோமெட் இவி எலக்ட்ரிக் கார் மக்களை வெகுவாக கவரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 23:59 [IST]
English summary
Mg motor car sales report of april 2025 check all details here
மேலும்... #mg motor #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+