6 வருஷத்துல டாடாவுக்கே சவால்விடும் அளவுக்கு வளரும்னு எதிர்பார்க்கல! பின்னாடி இருந்து கீ கொடுக்கும் சீன கம்பெனி

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் இப்போதுதான் நுழைந்தது போல் உள்ளது, ஆனால் அதற்குள் 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. இதனை கொண்டாடும் விதமாக ஹெக்டர் (Hector) மற்றும் அஸ்டர் (Astor) கார்களுக்கு சில சிறப்பு சலுகைகளை எம்ஜி அறிவித்துள்ளது.

இதன்படி, எம்ஜி ஹெக்டர் மற்றும் அஸ்டர் கார்களை முழுக்க முழுக்க 100 சதவீதமும் கடனுதவியில் பெற முடியும். மேலும், மாத்தவணை செலுத்துவதில் விடுப்பு எடுத்துக் கொள்ளும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என எம்ஜி அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகைகள் எல்லாம் இந்தியாவில் 6 வருட நிறைவை கொண்டாடும் விதமாக குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளன.

MG Motor Celebrates 6 Years In India

இந்த குறுகிய கால சலுகைகளின்படி, ஹெக்டர் மற்றும் அஸ்டர் கார்களின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களின் விலைகளும் குறைத்துக் கொண்டுள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox) உடன் ஹெக்டர் காரின் ஷார்ப் புரோ (Sharp Pro) வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு இனி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.19.59 லட்சம் மட்டுமே ஆகும்.

அதேபோல், அஸ்டர் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.9.99 லட்சமாக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த விலையில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அஸ்டர் காரின் ஸ்பிரிண்ட் (Sprint) வேரியண்ட் கிடைக்கும். இது இல்லாமல், ஷைன் (Shine), செலக்ட் (Select), ஷார்ப் புரோ (Sharp Pro) மற்றும் சாவி புரோ (Savvy Pro) என்கிற வேரியண்ட்களிலும் எம்ஜி அஸ்டர் கிடைக்கிறது.

MG Motor Celebrates 6 Years In India

ஆனால், இந்தியாவில் அஸ்டருக்கு முன்பே எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த கார் ஹெக்டர் ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்த முதல் கார், ஹெக்டர் ஆகும். ஹெக்டர் உடன் இந்தியாவில் நுழைந்த எம்ஜி நிறுவனம், ஆரம்பத்தில் மார்க்கெட்டில் பெரியதாக கண்டுக் கொள்ளப்படவில்லை.

ஆனால் கடந்த சில வருடங்களாகவே எம்ஜியின் ரேஞ்சே மாறிவிட்டது. இதற்கு காரணம், இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்தது ஆகும். பிரிட்டிஷ் கார் நிறுவனமாக இருப்பினும், சீனாவின் SAIC நிறுவனத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து பிறகு இந்தியாவில் தனது 2வது இன்னிங்ஸை துவங்கியுள்ளது.

MG Motor Celebrates 6 Years In India

குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் தீவிரமாக இருக்கும் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி கூட்டணிக்கு பிறகே கோமெட் இவி (Comet EV) மற்றும் விண்ட்சர் இவி (Windsor EV) உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட, எம்9 (M9) மற்றும் சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற இரு எலக்ட்ரிக் கார்களை எம்ஜி அறிமுகம் செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆரம்பத்தில் சொன்னதுதான், எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் அதற்குள் 6 வருடங்களை கடந்துவிட்டதை நம்பவே முடியவில்லை. காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது பாருங்கள். இந்த 6 வருடங்களில் பல்வேறு சூழல்களை இந்திய சந்தையில் எம்ஜி கடந்துள்ளது. முக்கியமாக, ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் எம்ஜி கூட்டணி சேர்ந்தது இந்த நிறுவனத்தின் பயணத்தில் முக்கியமான திருப்பு முனையாக பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 5, 2025, 16:24 [IST]
English summary
Mg motor celebrates 6 years in indian car market announced anniversary offers
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X