ஒரு காருக்கு ரூ3.04 லட்சம் விலை குறையுது! எம்ஜி காரை வாங்க இப்பவே ரெடியாகுங்க!

எம்ஜி நிறுவனம் தனது கம்பஷன் இன்ஜின் கார்களுக்கு ஜிஎஸ்டிக்கு பிறகான விலையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த கார்களின் விலை அதிகபட்சமாக ரூ3.04 லட்சம் வரை குறைகிறது. அது மட்டுமல்ல செப் 7ம் தேதி முதல் புக் செய்யப்படும் கார்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள நிலையில் தற்போது எம்ஜி நிறுவனமும் அதே முடிவை எடுத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை வரும் என்ற விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

MG Motor GST Reduction Price

இதன்படி அஸ்டர் கார் அதன் என்ட்ரி லெவல் காராக இரகு்கிறது. இந்த காரின் விலை ரூ54,000 வரை குறைகிறது. இதற்கு முன்னர் 45 சதவீதம் வரை வரி இருந்தது. தற்போது இது 40 சதவீதமாக குறைந்துள்ளது. அடுத்தாக ஹெக்டர் காரை பொருத்தவரை ரூ1.49 லட்சம் வரை விலை குறைகிறது. இதன் பெட்ரோல் வேரியன்டிற்கு இதற்கு முன்னர் 45 சதவீதமும், டீசல் வேரியன்டிற்கு 50 சதவீதமும் வரி இருந்தது. இந்த இரண்டு கார்களும் தற்போது 40 சதவீத வரி விதிப்பிற்குள் வருகிறது.

குளோஸ்டர் என்ற அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி காரை பொருத்தவரை ரூ3.04 லட்சம் விலை குறைப்பு வருகிறது. இந்த காருக்கு இதற்கு முன்னர் 50 சதவீதம் வரை வரி வதிக்கப்பட்டு வருகிறது. இது 40 சதவீதமாக குறைவதால் இந்த காரின் விலை அதிகமாக இருப்பதாலும் சுமார் 3.04 லட்சம் ரூபாய் வரை விலை குறைகிறது. இந்நிறுவனத்தின் விலை குறைப்பில் அதிகபட்ச விலை குறைப்பை பெறுவது இது தான்.

MG Motor GST Reduction Price

எம்ஜி நிறுவனம் மட்டுமல்ல, மஹிந்திரா, ஹூண்டாய், டொயோட்டா, ரெனால்ட், நிஸான், ஸ்கோடா, மெர்சிடீஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பில் பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்துவிட்டன. மற்ற நிறுவனங்களும் இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களையும் தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கோமெட் மற்றும் விண்ட்ஸர் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கு 5 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இவி கார்களுக்கான வரியில் எந்த மாற்றமும் இல்லை. சைபர்ஸ்டர் மறுஅறம் எம்9 ஆகிய கார்களும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களாக அந்த பிராண்டில் இருந்து விற்பனையாகி வருகிறது.

MG Motor GST Reduction Price

ஜிஎஸ்டி குறையப்போவதாக அறிவிப்புகள் வெளியான போதே பலர் கார் வாங்கும் முடிவை தள்ளிப்போட்டுவிட்டனர். இதனால் ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாகன விற்பனை நிறுவனங்களும் இதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தற்போது தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரிப்படுத்தி அதிக வாகனங்களை ஸ்டாக்கில் வைத்து வருகின்றனர். 22ம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் டெலிவரி நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் ஜிஎஸ்டி வரி குறைப்பு பலனை நேரடியாக மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விற்பனையை பெறப்போகிறது. எம்ஜி நிறுவனம் இதனால் அதிக விற்பனையை பெறப்போகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 7:00 [IST]
English summary
Mg motor gst reduction price cut up to rs 3 04 lakh
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X