ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் 450கிமீ-க்கு ஓடக்கூடிய எலக்ட்ரிக் கார்!! இன்னும் ரூ.80 ஆயிரம் குறைவான விலையில்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே, விண்ட்சர் இவி காருக்கு மேலும் கஸ்டமர்களை பெறும் முயற்சியாக சமீபத்தில் விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான விண்ட்சர் இவி காரை காட்டிலும் சற்று விலை அதிகமானதாக விண்ட்சர் புரோ இவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய விண்ட்சர் புரோ இவி காரை குறைவான விலையில் வாங்குவதற்கு ஏதுவாக எம்ஜி மோட்டார் நிறுவனம் வழிவகை செய்துள்ளது.

எம்ஜி விண்ட்சர் புரோ இவி காரின் விலை குறைக்கப்படவில்லை. மாறாக, விலை குறைவான வேரியண்ட்டில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்ஸென்ஸ் (Essence) என்கிற வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் காரை இனி எக்ஸ்க்ளூசிவ் (Exclusive) என்கிற வேரியண்ட்டிலும் வாங்கலாம்.

mg windsor pro exclusive introduced

புதிய விண்ட்சர் புரோ இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை எஸ்ஸென்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.18 லட்சத்து 9 ஆயிரத்து 800 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ.17 லட்சத்து 24 ஆயிரத்து 800 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய விலை குறைவான விண்ட்சர் புரோ இவி எக்ஸ்க்ளூசிவ் எலக்ட்ரிக் காரை விருப்பப்படுபவர்கள் ரூ.11,000 டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

காரின் டெலிவிரிகள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்திற்கு பிறகே துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஸென்ஸ் வேரியண்ட்டை போல், புதிய எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிலும் 52.9kWh திறன் கொண்ட பேட்டரி உடன் விண்ட்சர் புரோ இவி காரை பெறலாம். இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 449கிமீ தொலைவிற்கு சிங்கிள் சார்ஜில் பயணிக்கலாம்.

mg windsor pro exclusive introduced

எம்ஜி விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் காரின் புதிய எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் இரட்டை-நிற பெயிண்ட்டில், கருப்பு நிறத்திலான உட்புற கேபின் உடன் கிடைக்கும். இரட்டை நிறத்திலான 18-இன்ச் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள் உடன் கிடைக்கும் இந்த எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டை பேர்ல் வெள்ளை, ஸ்டார்ரி கருப்பு அல்லது டர்க்கைஸ் பச்சை நிறத்தில் வாங்கலாம். காருக்குள் டேஸ்போர்டில் 15.6 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை கிடைக்கும்.

இதனுடன், ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், AI-சார்ந்த குரல் மூலமாக கண்ட்ரோல் செய்யும் வசதிகள், கண்ணாடி சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜிங் வசதி, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றையும் புதிய எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் பெறலாம்.

mg windsor pro exclusive introduced

விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் காருக்கு தான் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் புதியதே தவிர்த்து, வழக்கமான விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் வேரியண்ட்களுள் எக்ஸ்க்ளூசிவ் ஒன்றாகும். விண்ட்சர் இவி கார் எக்ஸ்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எஸ்ஸென்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், எக்ஸ்சைட் வேரியண்ட்டில் மட்டுமே விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார் கிடைக்காது.

விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் அளவில் சிறியதான 38kWh திறன் பேட்டரி வழங்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 332கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14 லட்சம்- ரூ.16.15 லட்சம் வரையில் உள்ளன. இந்த காரை பேட்டரி இல்லாமல் BaaS (Batter-as-a-Service) முறையிலும் வாங்கலாம். அதேபோல், புதிய விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் காரும் BaaS முறையில் பேட்டரி இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார் முக்கியமாக அதிக விலையில், அதிக ரேஞ்ச் உடன் விண்ட்சர் இவி காரை வாங்க விரும்புபவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், அத்தகைய காரை குறைந்த விலையில் வழங்கும் முயற்சியாக எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டில் விண்ட்சர் புரோ இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 21, 2025, 22:05 [IST]
English summary
Mg motor introduces new exclusive variant of windsor pro ev electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X