மத்திய அமைச்சரை எப்படி எல்லாம் காக்கா புடிக்குறாங்க! சீன கம்பெனி ஆச்சே...
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), தனது விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரில் புதியதாக 'இன்ஸ்பயர் எடிஷன்' (Inspire Edition) என்கிற பெயரில் புதிய லிமிடெட் எடிசன் (Limited Edition) காரை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. யாரை இன்ஸ்பயராக எடுத்துக் கொண்டு எம்ஜி நிறுவனம் இந்த லிமிடெட் எடிசனை அறிமுகம் செய்துள்ளது என்றால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Union Minister Nitin Gadkari) அவர்களை ஆகும்.
தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக விளங்கும் எம்ஜி விண்ட்சர் இவி, நாட்டில் வெற்றிகரமான ஒரு வருட பயணத்தை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் இந்த லிமிடெட் எடிசன் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 யூனிட்கள் மட்டுமே இந்த சிறப்புப் பதிப்பு ஆனது உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் புதிய விண்ட்சர் இவி இன்ஸ்பயர் எடிசனை வெளியிட்டுள்ளார். நிலையான போக்குவரத்துக்கான தீவிர ஆதரவாளரான அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான திட்டங்களை வடிவமைப்பதில் முன்னணியில் இருந்து வருகிறார்.
மின்சார வாகனங்கள் மார்க்கெட்டில் இந்தியாவை முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்கான நிதின் கட்கரியின் அர்ப்பணிப்பு, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் குடிமக்கள் என இரு தரப்பினருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. புதிய விண்ட்சர் இவி இன்ஸ்பயர் எடிசன் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "மாசற்ற சுத்தமான போக்குவரத்து நமது சுற்றுச்சூழலுக்கு இன்றியமையாதது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்."

"இது நிலையான கண்டுபிடிப்புகளில் உலகை வழிநடத்த இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. JSW எம்ஜி மோட்டார் இந்தியா போன்ற பிராண்டுகள் இந்த பார்வையை மிகவும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்ட்சர் இவி இன்ஸ்பயர் எடிஷன் ஆனது உத்வேகம் எப்படி செயலாக மாற முடியும் என்பதற்கும், மின்சார வாகனப் பயன்பாட்டில் ஒவ்வொரு அடியும் நம்மை ஒரு பசுமையான நாளை நோக்கி எப்படி நெருங்குகிறது என்பதற்கும் ஒரு குறியீடு" என்றார்.
விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் முன்னேற்றப் பயணத்தின் அடையாளமாக இன்ஸ்பயர் எடிஷன் திகழ்கிறது. இது ஆடம்பரம், நிலைத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது. கடந்த ஆண்டில், விண்ட்சர் EV, கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் நடைமுறை நன்மைகளை இணைத்து, நாடு முழுவதும் கார் வாங்குபவர்களின் நம்பிக்கையைப் பெற்று, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் EV என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

இதன் இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப், செக்மென்ட்டிலேயே அதிக உட்புற இடவசதி மற்றும் 135 டிகிரி சாய்வான பின் இருக்கைகள் உள்ளிட்டவை இணையற்ற வசதியை வழங்குகின்றன. அதே நேரத்தில் விசாலமான, தொழில்நுட்ப நிறைந்த கேபின் ஒவ்வொரு பயணத்தையும் மேம்படுத்துகிறது. இலகுவான மற்றும் விரைவாக பதிலளிக்கும் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் இந்த எலெக்ட்ரிக் காரை நகரத்தில் ஓட்டுவதற்கு எளிதாக்குகிறது.
மேலும், பேட்டரியை சேவையாக வழங்கும் செயல்முறை (BaaS) உடன் செலவுகளைக் குறைத்து, பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் கார்களுக்கு உரிமையாளர் ஆகுவதற்கான வாய்ப்பை எளிதாக்குகிறது. 38 kWh பேட்டரி உடன் கிடைக்கும் புதிய இன்ஸ்பயர் எடிஷன் மூலம், விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் புதிய i-SMART அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் 40,000 யூனிட்களைக் கடந்து, வாடிக்கையாளர்களிடையே விண்ட்சர் இவி பெற்றுள்ள ஆழமான நம்பிக்கையையும் அன்பையும் இந்த இன்ஸ்பயர் எடிஷன் பிரதிபலிக்கிறது. மேலும், விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் வெற்றியின் மூலம், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன துறைக்கு எம்ஜியின் பங்களிப்பின் அடையாளமாகவும் இந்த இன்ஸ்பயர் எடிசன் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications









