வாங்குறதுல பாதி பேர் இந்த காரை தான் தேர்வு பண்ணுறாங்க! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட மாத விற்பனையில் பாதிக்கும் மேல் எம்ஜி விண்ட்ஸர் இவி காரை மட்டுமே விற்பனவை செய்து வருகிறது.கடந்த 6 மாதமாக இந்த கார் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்ல எம்ஜி கோமெட் இவி காரின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இவி காராக எம்ஜி விண்ட்ஸர் இவி கார் தான் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தரமான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது பெட்ரோல் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில் இந்நிறுவனத்தின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 6562 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் எம்ஜி விண்ட்ஸர் இவி கார் மட்டும் மொத்தம் 4511 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. எம்ஜி ஹெக்டர் காரை பொருத்தவரை 379 கார் விற்பனையாகியுள்ளது. கோமெட் இவி காரை பொருத்தவரை 1113 கார்கள் விற்பனையாகியுள்ளது. எம்ஜி இசட்எஸ் இவி காரை பொருத்தவரை 380 கார்கள் விற்பனையாகியுள்ளன. எம்ஜி அஸ்டர் காரை பொருத்தவரை 179 கார்கள் விற்பவனையாகியுள்ளன.
இதில் எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் இவி காரை கடந்த மார்ச் மாதம் 3641 கார்களும், ஏப்ரல் மாதம் 3660 கார்களும், மே மாதம் 3939 கார்கும், ஜூன் மாதம் 3799 கார்களும், ஜூலை மாதம் 4308 கார்களும், ஆகஸ்ட் மாதம் 4511 கார்களும் விற்பனை செய்துள்ளது. இது மிக சிறப்பான வளர்ச்சியை இந்நிறுவனம் படிப்படியாக பெறுவதை காட்டுகிறது.

அவுத்தாக எம்ஜி கோமெட் இவி காரை பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் 173 கார்களும், ஏப்ரல் மாதம் 191 கார்களும், மே மாதம் 823 கார்களும், ஜூன் மாதம்856 கார்களும், ஜூலை மாதம் 912கார்களும், ஆகஸ்ட் மாதம் 1113 கார்களும் விற்பனையாகியுள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்னர் 200 பேர் கூட வாங்காத காரை தற்போது 1000 பேருக்கு மேல் வாங்கி வருகின்றனர்.
இதில் எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை படிப்படியாக சரிந்து வருவதை யும் காண முடிகிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 547 கார்களும், ஏப்ரல் மாதம் 977 கார்களும், மே மாதம் 1098 கார்களும், ஜூன் மாதம் 757 கார்களும், ஜூலை மாதம் 579 கார்களும், ஆகஸ்ட் மாதம் 379 கார்களும் விற்பனையாகியுள்ளது. கடந்த மே மாதம் 1098 விற்பனையானது தற்போது 379க்கு குறைந்துள்ளது.

இந்த ஹெக்டர் காரில் நீண்ட காலமாக அப்டேட் இல்லாததால் பலர் இந்த காரை வாங்க தயங்கி வருகின்றனர். போட்டி தயாரிப்புகளில் உள்ள சில அம்சங்கள் இல்லாதது இந்த காரின் விற்பனையை குறைத்திருக்கலாம். இந்த காரை எம்ஜி நிறுவனம் அப்டேட் செய்தால் நிச்சயம் இந்தகாரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களை அதிகம் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இவி கார்களை களம் இறக்கி ய நிலையில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மக்கள் பலர் இனி எம்ஜி இவி கார்களை அதிகம் வாங்குவார்கள். இதில் பல புதிய கார்களை களம் இறக்கினால் டாடாவிற்கு நிச்சயம் டஃப் வழங்கும் வகையில் இதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









