இந்த ஒரு கார் வந்துச்சு ஒட்டு மொத்த மார்கெட்டையும் மாத்தி போட்டுருச்சு! இந்த காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்க
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் கடந்த மே மாத விற்பனையில் அபார வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு அந்நிறவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய விண்ட்ஸர் நிறுவனத்தின் கார் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த விற்பனை எண்ணிக்கை எவ்வளவு? எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டம் மொத்தம் 6304 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 4510 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை சுமார் 40 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் எம்ஜி விண்ட்ஸர் இவி காரின் புரோ வேரயின்டின் அறிமுகம் தான். எம்ஜி விண்ட்ஸர் காரில் ஏற்கனவே இருக்கும் வேரியன்ட் போக புதிதாக எஸென்ஸ் ப்ரோ மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் ப்ரோ ஆகிய இரண்டு வேரியன்ட்கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் முழு சார்ஜில் 449 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வேரியன்ட்களில் பிரிமியம் வேரியன்டான எஸேன்ஸ் ப்ரோ வேரியன்ட் லெவல் 2 அடாஸ், வி2வி மற்றும் வி2எல் ஆகிய தொழிற்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்ய தயாராக இருக்கிறது.

எம்ஜி விண்ட்ஸர் புரோ காின் விலையை பொருத்தவரை ரூ13.09 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. இது பேட்டரி சப்ஸ்கிரிப்ஷன் மாடல் காருக்கான விலையாகும். இதற்காக ஒரு கி.மீக்கு ரூ4.5 பேட்டரி கட்டணமாக வழங்க வேண்டும். இதுவே பேட்டரியையும் சேர்த்து சொந்தமாக்க வேண்டும் என்றால் ரூ18.09 லட்சத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். இந்த கார் சிலாடன் ப்ளூ மற்றும் ஆரா சில்வர், கிளேஸ் ரெட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
விண்ட்ஸர் புரோ இவி பேக்கில் 52.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 449 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இதுவே ஸ்டாண்டர்டான விண்ட்ஸர் இவி காரில் 332 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இந்த கார்136 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் காரில் அடுத்து 3 மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

எம்ஜி செலக்ட் என்ற பிரிமியம் டீலர்ஷிப்களில் சைபர்ஸ்டர் என்ற ஸ்போர்ட்ஸ் கார் எம்9 எலெக்ட்ரிக் எஸ்யூவி, மற்றும் மெஜெஸ்டர் ஆகிய கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த கார்கள் காஸ்ட்லியான கார்களாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கார்களாக இருக்கின்றன. இந்நிலையில் இதன் விற்பனையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இதை நமக்கு தெளிவாக காட்டுகிறது. இதனால் தொடர்ந்து இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய போகிறது.


Click it and Unblock the Notifications









