பார்க்கதான் ரெண்டு கார்களும் ஒரே மாதிரி இருக்கும்.. ஆனா வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவை.. புத்திசாலி கார்கள்!

இந்தியாவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) உருவெடுத்திருக்கின்றது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக இந்த நிறுவனம் அடுத்தடுத்து என தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே மூன்று முதல் 6 மாதங்களுக்கு ஓர் புதுமுக வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எண்ணத்தில் இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விண்ட்ஸர் இவி (Windsor EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சைபர்ஸ்டர் (Cyberster) சூப்பர் கார் ரக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதைமட்டுமல்ல இன்னும் பல்வேறு புதுமுக வாகனங்களை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் செயல்பட்டு இருக்கின்றது.

Mg im 5 ev and im 5 ev

நிறுவனம் இந்த உலக மேடையை பயன்படுத்தி பலதரப்பட்ட புதுமுக வாகனங்களைக் காட்சிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில் ஐஎம்5 (IM5) மற்றும் ஐஎம்6 (IM6) எனும் கார் மாடல்களையும் அது காட்சிப்படுத்தியது. இந்த கார் மாடல்கள் பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

நவீன யுகத்திற்கு உகந்த காராகவே இதனை எம்ஜி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கார் மாடல்களுக்கு எம்ஜி நிறுவனம் ஐஎம் என்கிற பெயரைச் சூட்டி இருக்கின்றது. இன்டலிஜென்ட் மொபிலிட்டி (Intelligent Mobility) என்பதன் சுருக்கமே ஐஎம் ஆகும்.

Mg im 5 ev

இதன் தமிழ் அர்த்தம் 'புத்திசாலித்தனமான வாகனம்' என்பதாகும். இரண்டும் பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், இரண்டு வெவ்வேறு ரக கார் மாடல்கள் ஆகும். ஐஎம் 5 செடான் ரக காராகும். ஐஎம் 6 எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

செடான் கார் காதலர்கள் மற்றும் எஸ்யூவி கார் காதலர்கள் என இருவரையும் கவர வேண்டும் என்கிற நோக்கிலேயே ஐஎம் கார் மாடல் இந்த இரண்டு பிரிவிலும் தயார் செய்திருக்கின்றது. மிகவும் எளிமையான தோற்றத்தில் இருக்கின்றது. ஆனால், அதுவே அதற்கு கவர்ச்சியான லுக்கை வழங்குகின்றது.

இதேபோல், இரண்டும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்ததாக இருந்தாலும் சிறப்பம்சங்கள் மற்றும் அலங்கரிப்பு உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒரே மாதிரியான கார்களாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், இரண்டிலும் 100 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 600 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதேபோல், 778 எச்பி மற்றும் 802 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல பிரீமியம் அம்சங்களும் மிக தாராளமாக இதில் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 26.3 அங்குல தொடுதிரையும், 10.5 அங்குல பயணிகளுக்கான திரையும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமல்ல மேலும் ஓர் திரையாக 10.5 அங்குல அளவில் ஆபரேட்டிங் கன்ட்ரோல் வசதிகளைத் தாங்கிய திரை ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல செல்போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜர், 100-க்கும் அதிகமான வண்ணங்களைக் கொண்ட ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கும்.

மேலும், டூயல் ஜோன் ஏசி சிஸ்டம், பவர்டு டெயில்கேட் மற்றும் 21 ஸ்பீக்கர்களைக் கொண்ட சவுண்டு சிஸ்டம் போன்றவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. இதுமட்டுமல்ல 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, மும்முனை சீட் பெல்ட், அடாஸ் தொழில்நுட்ப அம்சங்களையும் எம்ஜியின் ஐஎம்5 மற்றும் ஐஎம்6 கார் மாடல்களில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்களை ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக காட்சிப்படுத்துதல் மட்டுமே எம்ஜி செய்திருக்கின்றது. விரைவில் இவற்றை எம்ஜி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் வெளியாகவில்லை. விரைவிலேயே இதுபற்றிய தகவலை எம்ஜியிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 20:50 [IST]
English summary
Mg showcased im 5 ev and im 6 ev with cutting edge features at bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+